இந்தியாவில் பயன்படுத்தாத வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இவற்றை தனது பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் எதிர்காலத்தில் பயன்படுத்தும் என்று பில்லியனர் முதலீட்டாளர் வாரன் பபெட் கூறியுள்ளார்.
வாரன் பபெட்டின் இந்தப் பேச்சு பெர்க்ஷயர் ஹாத்வேயின் வருடாந்திர கூட்டத்தில் பல லட்சம் நிறுவன முதலீட்டாளர்களையும், வென்சர் கேப்பிடல் நிறுவன முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

இக்கூட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த தூர்தர்ஷி அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால், பபெட்டிடம் இந்தியாவில் பெர்க்ஷயர் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வாரன் பபெட் இது நல்ல கேள்வி, இந்தியா போன்ற நாடுகளில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்றார்.
இந்த கூட்டத்துக்கு முன்பாக பெர்க்ஷயர் ஹாத்வே 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இதில் இக்காலாண்டில் சுமார் 189 பில்லியன் டாலர் அளவிலான நாணய இருப்பு உள்ளதாக தெரிவித்தது. மார்ச் 31 முடிவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு இருப்பு குறைந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெர்க்ஷயர் ஹாத்வேயின் நிறுவனர், தலைவர் மற்றும் சிஇஓ இந்திய முதலீடு குறித்து கூறுகையில், எப்படியிருந்தாலும் இந்தியாவில் உள்ள வணிகங்கள் அல்லது பெர்க்ஷயர் பங்கேற்க விரும்பும் பரிவர்த்தனைகள் தொடர்பான ஏதேனும் நன்மை அல்லது நுண்ணறிவு உள்ளதா என்பதுதான் கேள்வி. இதை பெர்க்ஷயரில் அதிக ஆற்றல் மிக்க நிர்வாகம் இதைத் தொடரலாம் என்று கூறினார்.
93 வயதான பபெட் மேலும் பேசுகையில், பெர்க்ஷயர் நிறுவனம் உலகம் முழுவதும் பெரும் நற்பெயரைக் கொண்டுள்ளது என்றார். ஆய்வு செய்யப்படாத அல்லது கவனிக்கப்படாத வாய்ப்பு இருக்கலாம்... ஆனால் அது எதிர்காலத்திற்காக திட்டமிட்டப்பட்டு இருக்கலாம் என்று அவர் இந்தியாவைப் பற்றி கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் கேள்வி - பதில் நிகழ்வில் பெர்க்ஷயர் ஹாத்வே சமீபத்தில் எடுத்த சில முக்கிய முதலீட்டு முடிவுகள் தொடர்பான பல கேள்விகளுக்கு பபெட் பதிலளித்தார்.
ஆப்பிளின் பங்குகளை குறைப்பது முக்கிய விஷயங்களில் ஒன்றாகும். இந்த பங்கு மீதான நீண்ட கால பார்வைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பபெட் தெளிவுபடுத்தினார், சமீபத்தில் ஆப்பிள் பங்குகளில் மந்தநிலை இருந்தபோதிலும் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குகளில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணைத் தலைவர்களான கிரெக் ஏபல், அஜித் ஜெயின் ஆகியோர், வாரன் பஃபெட் வெளியேறிய பின்பு, இந்நிறுவனத்தை வழிநடத்துவதற்குத் தங்களைத் தாங்களே சரியானவர்கள் என்று நிரூபித்துள்ளதாகவும் அவர் பங்குதாரர்களிடம் கூறினார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications