பங்குச்சந்தை முதலீட்டு மூலம் பெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாரன் பஃபெட் எப்போதும் இல்லாமல் அதிகப்படியான இழப்பை எதிர்கொண்டு உள்ளார்.
வாரன் பஃபெட் அமெரிக்க முதலீட்டாளர் மட்டும் அல்லாமல் அமெரிக்காவின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து முதலீடு செய்து பெரும் பணத்தைச் சம்பாதித்தவர். இவரின் முதலீட்டு பார்மூலா-வை தான் இந்தியாவில் பல பெரும் முதலீட்டாளர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் சமீபத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டதில் இவருடைய முதலீட்டு மதிப்பும் சரிந்துள்ளது. வாரன் பஃபெட்-ன் பெர்க்ஷயர் ஹாத்வே இன்க் நிறுவனம் சனிக்கிழமை எஸ்பிஐ வங்கி போலத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
கடந்த ஒரு வருடத்தில் முதல் முறையாகச் செப்டம்பர் காலாண்டில் பெர்க்ஷயர் ஹாத்வே இன்க் நஷ்டத்தைப் பதிவு செய்ததுள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே வைத்திருக்கும் பங்குகளின் விலை அமெரிக்கப் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்தது மூலம் பெரும் இழப்பை எதிர்கொண்டது.
ஆனால் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபம் அதன் காப்பீட்டு வர்த்தகத்தின் மேம்பட்ட முடிவுகள் மூலம் உயர்ந்தது பக்கபலமாக உள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர இழப்பாக 12.77 பில்லியன் டாலர் அல்லது ஒரு கிளாஸ் A பங்கிற்கு 8,824 டாலர் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
பெர்க்ஷயர் ஹாத்வே கடந்த வருடம் இதே செப்டம்பர் காலாண்டில் 2.8 பில்லியன் டாலர் மட்டுமே நஷ்டத்தைப் பதிவு செய்த நிலையில் தற்போது 12.77 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டம் பதிவாகியுள்ளது. இதோடு ஏற்கனவே கூறியது போல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 41 சதவீதம் உயர்ந்து 10.76 பில்லியன் அல்லது ஒரு கிளாஸ் A பங்கிற்கு 7,444 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 7.65 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெர்க்ஷயர் ஹாத்வே இந்தத் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த சந்தையில் இருக்கும் அதன் பங்குகளின் புழக்கத்தைக் குறைக்கச் செப்டம்பர் காலாண்டில் மட்டும் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைச் சந்தையில் இருக்கும் பங்குகளை மீண்டும் வாங்கியுள்ளார். இதன் மூலம் பெர்க்ஷயர் ஹாத்வே சுமார் 7 பில்லியன் டாலர் தொகையைப் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்காக மட்டுமே முதலீடு செய்துள்ளது.
ஒரு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் 5,34,132.44 டாலர், அப்படியானால் இந்திய ரூபாய் மதிப்பில் 44,413,112.386 ரூபாய் கிட்டதட்ட ஒரு பங்கு விலை 4.4 கோடி ரூபாய். இந்தியாவில் எப்படி எம்ஆர்எ பங்குகள் சாமானிய மக்களால் வாங்க முடியாமல் இருப்பது போலவே பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் பங்குகளும் காஸ்ட்லியானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications