அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பபெட் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10 வருடங்களுக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், கடந்த சில வருடங்களாக 2வது இடத்தில் இருந்து வாரன் கீழே தள்ளப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெக் நிறுவனப் பங்குகளின் விலை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், வார்ன் பபெட் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவை தாண்டியுள்ளது.
இதன் மூலம் 90வயதாகும் வாரன் பபெட் 100 பில்லியன் டாலர் கிளப்-ல் 6வது நபராகச் சேர்ந்துள்ளார்.
வாரன் பபெட் அசத்தல்
வாரன் பபெட் டெக், வங்கியியல், உற்பத்தி, ரீடைல் எனப் பல துறைகளில் முதலீடு செய்துள்ள நிலையில் அமெரிக்கச் சந்தையின் புதன்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் மூலம் இவரின் மொத்த சொத்து மதிப்பு 100.4 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் கிளப்
இதன் மூலம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடையோர் பட்டியலில் 6வது நபராக வாரன் பபெட் இணைந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் கிளப் பட்டியலில் ஜெப் பிசோஸ், எலான் மஸ்க், பில் கேட்ஸ் ஆகியோர் இருக்கும் நிலையில் தற்போது வாரன் பபெட் 6வது நபராகச் சேர்ந்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் அதிரடி வளர்ச்சி
வாரன் பபெட் தலைமை வகிக்கும் பெர்ஷைர் ஹேத்தாவே நிறுவனத்தின் A பங்குகள் 2021ல் 15 சதவீதமும், S&P 500 குறியீட்டில் இந்நிறுவனப் பங்குகள் 3.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு வாரன் பபெட் நிறுவனத்திற்கு மிகவும் சாதகமான ஆண்டாக அமைந்துள்ளது.
ரீடைல் பங்குகள் கொள்முதல்
இதேகாலகட்டத்தில் பெர்ஷைர் ஹேத்தாவே நிறுவனம் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து தனது நிறுவனப் பங்குகளையே ரீடைல் சந்தையில் இருந்து வாங்கியுள்ளது. இதனால் சந்தையில் வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளின் அளவீடு கணிசமாகக் குறைந்துள்ளது.
நன்கொடை அதிகம்
2006ஆம் ஆண்டு முதல் வாரன் பபெட் தனிப்பட்ட முறையிலும், பெர்ஷைர் ஹேத்தாவே நிறுவனத்தின் வாயிலாகவும் சுமார் 37 பில்லியன் டாலர் தொகையை Giving Pledge வாயிலாக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். இந்த நன்கொடை மூலம் வாரன் பபெட்-ன் சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications