வாரன் பாஃபெட்டுக்கே இந்த நிலைமைன்னா.. மற்றவங்களுக்கு.. $50 பில்லியன் நஷ்டமாம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட், அமெரிக்காவைச் சேர்ந்த சிறந்த பங்கு சந்தை முதலீட்டாளரும், சிறந்த தொழில் அதிபரும் ஆவார்.

உலகிலேயே மிகப்பெரிய வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக திகழும் இவர், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.

உலகின் மிகப்பெரிய முதலீட்டாளராக கருதப்படும் இவருக்கே, கடந்த முதல் காலாண்டில் நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

இப்படி உலகினை முதலீட்டின் மூலம், அதிலும் பங்கு சந்தை முதலீட்டின் மூலம் பெரும் லாபத்தினை கண்டு வரும், வாரன் பஃபெட்டினை கூட இந்த கொடிய கொரோனா என்னும் அரக்கன் விட்டபாடாக இல்லை. வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வேயின் முதல் காலாண்டில் 49.75 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

வாரன் பபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர் நிகர இழப்பை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல பெரிய இயக்க வணிகங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருவாய் வீழ்ச்சி

வருவாய் வீழ்ச்சி

பெர்க்ஷயர் ஹாத்வே அதன் 90 க்கும் மேற்பட்ட வணிகங்களில் கொரோனா வைரஸின் தாக்கத்தின் எதிர்மறை விளைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் ஆங்கில செய்தி ஒன்றில் வெளியாகியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கடந்த சனிக்கிழமையன்று வருடாந்திர கூட்டத்தில் சனிக்கிழமையன்று வாரன் பஃபெட் பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு லாபம் தான்

கடந்த ஆண்டு லாபம் தான்

கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தினை கண்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 21.66 பில்லியன் டாலர் லாபத்தினை கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பெர்க்ஷயர் அதன் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னர் முடிவுகளை வெளியிட்ட நிலையில், அங்கு ஏப்ரல் மாதத்தில் பெர்க்ஷயர் தனது நான்கு பெரிய யு.எஸ். விமான நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்றது. இந்த துறையில் ஏறத்தாழ 7 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரை பெர்க்ஷயர் முதலீடு செய்ததை தவறு செய்ததாக பஃபெட் கூறியுள்ளார்.

பங்குகள் வீழ்ச்சி

பங்குகள் வீழ்ச்சி

இந்த நிலையில் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் Standard & Poor's 500 20% வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் நான்கு விமான நிறுவனங்கள் உட்பட பல பெரிய பெர்க்ஷயர் ஹோல்டிங்கள் மிக பெரும் வீழ்ச்சியினை கண்டன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆக இந்த கொரோனா வாரன் பஃபெட்டையும் விடவில்லை எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren buffett’s berkshire posts record net loss $50 billion in march quarter

Warren buffett sold his firm’s entire holding in the four major us airlines. Also Berkshire posts nearly $50 billion net loss after coronavirus impact on stocks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X