சான்பிரான்சிஸ்கோ : உலகப் புகழ்பெற்ற உலகின் மிகப் பெரிய பணக்காரரும், பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet) உடன் ஒருவேளை மதிய உணவருந்துவதற்கு, வருடா வருடம் ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏலத்தின் மூலம் நடப்பு ஆண்டில் cryptocurrency entrepreneur ஆன ஜஸ்டின் சன் என்பவர் தேர்தெடுக்கப்பட்டார்.
ஆமாங்க.. அப்படி ஏலத்தின் மூலம் அதிக விலை கொடுத்து உணவு அருந்த புக் செய்திருந்தவர் தான் கிறிஸ்டின் சன். கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான இவர், kidney stones பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளராம்.

இந்த நிலையில் வாரன் பஃபெட் உடன் ஜூலை 25ம் தேதி உணவருந்த தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் வியாழக்கிழமையன்று ஜூலை 25ம் தேதி உணவு அருந்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதை மற்றொரு நாளுக்கு தள்ளி வைத்துள்ளார்களாம்.
இன்றைய மதிப்பில் 31 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த இந்த ஏலம் தான், உலகிலேயே விலைமதிப்பு மிக்க மதிய உணவாகவும் கருதப்பட்டது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடு அற்றவர்களுக்காக இயங்கி வரும் (Glide) கிளைட் என்ற தொண்டு நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டு தோறும் இந்த ஏலத்தை நடத்தி வருகிறார் வாரன் பஃபெட்.
இதுவரை இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 19 வருடங்களாக பணியாற்றி வருகிறாம் வாரன் பஃபெட். இந்த நிலையில் இதுவரை இதன் மூலம் 30 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளராம்.
தொழில்நுட்ப வளாகங்கள் நிறைந்த சான்பிரான்சிஸ்கோவிலுள்ள, சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள மக்களின், வாழ்க்கை தரத்தினை உயர்த்துவது மற்றும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் உணவு வழங்குதல், பல மன நிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சைக்காக பங்களிப்பு செய்தல், அதோடு சுமார் 8,000 மக்கள் வீடு இல்லாமல் தெருக்களில் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவுவதற்காகவே இப்படியொரு ஏலத்தினை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
அதோடு ஒரு புறம் மாட மாளிகைகள் அமைந்திருந்தாலும், மறுபுறம் வீடு இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றனர். இது நாட்டில் ஒரு சம்த்துவமின்மையை காட்டுகிறது. அதோடு சிலர் கூறுகிறார்கள் நாளுக்கு நாள் பொருளாதாரம் மேன்மை அடைந்து வருகிறது என்று. ஆனா உண்மை என்னவெனில் மக்களின் பொருளாதாரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
வீடு, உணவு, மற்றும் பிற தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுவே உண்மை என்கிறார் கரேன். ஆக இவர்களுக்கு உதவுவதற்கு வாரன் பப்ஃபெட் இப்படியொரு திட்டத்தினை அறிமுகம் செய்தாராம். இந்த நிலையில் இந்த வருடம் தற்போது தள்ளிப்போயியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications