இன்றைய இளைஞர்களுக்கு கை நிறைய காசு கொட்டினால் தலைகால் புரியாது. என்ன செய்வதென்று தெரியாமல் தங்கள் இஷ்டத்துக்கு செலவு செய்து விடுகின்றனர். அமெரிக்காவில் அப்படி நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
அமெரிக்காவில் 26-35 வயதானவர்கள் ஒரு வருடத்துக்கு 2,00,000 டாலர்கள் சம்பாதித்தால் அவர்கள் மியாமி, ஆஸ்டின், டெக்ஸாஸ், ஜெர்சி சிட்டி, நியூ ஜெர்சி போன்ற பிரபல நகரங்களுக்கு படையெடுக்கின்றனர். இந்த வயது குரூப்பில் வெறும் 2 சதவீதத்தினர் தான் வருடத்துக்கு 2,00,000 டாலர்கள் சம்பாதித்துள்ளனர். இது மக்கள் தொகையின் வருவாயில் 16 சதவீதம் ஆகும்.

அதிகம் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் பற்றி ஸ்மார்ட்அசெட் அமைப்பு நடத்திய ஆய்வுப்படி 8.68 மில்லியன் மக்கள் ஆண்டுக்கு 2,00,000 டாலர்கள் சம்பாதிக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. புளோரிடா, டெக்ஸாஸ் மாகாணங்களில் இதற்கு வருமான வரி விதிக்கப்படாது. இதனால் அதிகம் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் பட்டியலில் இந்த இரண்டு மாகாணங்களும் மேலே இருக்கின்றன. கலிபோர்னியா, நியூயார்க் ஆகியவை கீழே இருக்கின்றன.
இடாஹோ, மோன்டானா ஆகிய நகரங்களில் இளைஞர்கள் அந்த அளவுக்கு சம்பாதிக்கவில்லை. புளோரிடாதான் அதிகம் சம்பாதிப்பவர்கள் வந்து வசிக்கும் நகரமாக உள்ளது. இந்தாண்டு வந்த 2200 பேருடன் மொத்தம் 23,500 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
டெக்ஸாசிலும் 1900 பேர் குடியேறியுள்ளனர். அதேவேளையில் நியூயார்க்கிலிருந்து 5000க்கும் மேற்பட்ட அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறையினர் வெளியேறி உள்ளனர். இருப்பினும் நியூயார்க்கில் தான் அமெரிக்காவிலேயே அதிகம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நியூஜெர்சி நகரத்துக்குத்தான் மிக அதிக அளவில் குடியேறியிருக்கின்றனர். 1000 பேர் புதிதாக குடியேறி இருந்தாலும் அதிகம் சம்பாதிப்பவர்கள் நிறையபேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சுமார் 2700 அதிகம் சம்பாதிப்போர் வெளியேறியதால் ஏற்பட்ட இழப்பு இருந்த போதிலும் நியூ ஜெர்சியில் 1000 இளம் புரபஷனல்கள் அதிகரித்துள்ளனர். நிறைய பேர் ஜெர்சி சிட்டி, ஹோபோகன் நகரங்களுக்கு சென்று குடியேறியதால் அங்கு வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது.
அதிகம் சம்பாதிக்கும் இளைஞர்கள் குடிபெயர்வதில் கனக்டிகட் நகரம் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இங்கும் ஆர்வத்துடன் குடிபெயர்ந்து வருகின்றனர். நியூ ஜெர்சியில் அதிகம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. வாஷிங்டன் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகையில் அதிகம் சம்பாதிக்கும் மக்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களுடன் சராசரியாக வருமானம் ஈட்டுப்பவர்கள் உடன் வசிக்கின்றனர்.
13 சதவீதத்தினருக்கும் மேல் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 2,00,000 டாலர்கள் சம்பாதிப்பவர்களாக வாஷிங்டனில் வசிக்கின்றனர். கலிபோர்னியாவில் 10 சதவீதம் பேர் வாழ்கின்றனர். வாஷிங்டன் டிசி மாகாணத்தை விட வாஷிங்டனில் 16 சதவீதம் பேர் அதிகம் உள்ளனர். 700 வசதி படைத்த இளைஞர்கள் வாஷிங்டனை விட்டு வெளியேறி விட்டனர். கொலராடோ, நார்த் கரோலினா, டென்னஸ்ஸிவிலும் வசதி படைத்த அதிக மக்கள் வசிக்கின்றனர்.
ஸ்மார்ட்அசெட்டின் ஆறாவது ஆண்டு அறிக்கையில் மில்லியன் கணக்கில் ஆஸ்டின், டெக்ஸாஸ், டென்வர், டல்லாஸ், ஜாக்ஸன்வில்லி, புளோரிடா நகரங்கள் அதிகம் சம்பாதிப்பவர்களை ஈர்ப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மாறாக நியூயார்க் சிட்டி, சிகாகோ, பாஸ்டன் ஆகிய நகரங்களில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆஸ்டினில் விலைவாசி மிக அதிகம். அதிக செலவு பிடிக்கும் நகரமாக உள்ளது. இதற்கு காரணம் மிக அதிகமான வீட்டு வாடகை ஆகும். எனவே அங்கு நகரத்தை விட்டுவிட்டு புறநகர் பகுதிகளில் மக்கள் சென்று குடியேறுகின்றனர்.


Click it and Unblock the Notifications