உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது, சமீபத்திய ஆண்டுகளாகவே சற்று மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றது.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இது மோசமான நிலையை எட்டியுள்ளது.
கொரோனா மட்டும் அல்ல, சீனாவின் இந்த மோசமான நிலைக்கு 5 விஷயங்கள் தான் காரணம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது என்ன காரணம்? அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ரெசசன் வருமா?
சீனாவின் ஜூலை - செப்டம்பர் காலகட்டத்திலான வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் ரெசசனை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - சீனாவுடனான பிரச்சனைக்கு மத்தியில் வர்த்தக பதற்றங்களும் நிலவி வருகின்றது. இதனால் இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரமும் பாதிப்பினை கண்டு வருகின்றது.
தவறான ஜீரோ கோவிட் பாலிசி
சீனாவில் கொரோனாவினை தடுக்க ஜீரோ கோவிட் பாலிசியானது அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சீனாவின் முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்து போயின. சொல்லப்போனால் பல நிறுவனங்களும் சீனாவினை விட்டு வெளியேற இது முக்கிய காரணமாக அமைந்தது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஜீரோ கோவிட் பாலிசி மற்றும் அமல்படுத்தப்பட்டுள்ள ஜீரோ கோவிட் பாலிசியால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற் துறையானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தேவை சரிவு
ஜீரோ கோவிட் பாலிசியின் மத்தியில் நுகர்வுகள் குறைந்து விட்டது. குறிப்பாக உணவு மற்றும் சில்லறை வியாபாரம், சுற்றுலா துறையில் அழுத்தம் காணப்பட்டது. தற்போது தொழிற்துறையானது இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியிருந்தாலும், இந்த வளர்ச்சியானது தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேவை குறைந்துள்ள நிலையில் உற்பத்தியானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய ஆர்டர்கள் வேலை வாய்ப்புகள் என பலவும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் காரணமாக விலைவாசியானது உச்சத்தினை எட்டியுள்ளது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
சீனா பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு எடுத்து வரும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறு தொழில்கள், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக 1 டிரில்லியன் யுவானை சீனா அறிவித்தது. ஆனால் நிபுணர்கள் செலவினங்களை அதிகரிக்கவும், வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், அரசு இன்னும் கூடுதலான நிதியினை ஊக்குவிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
சீனாவின் ரியல் எஸ்டேட் மார்கெட்
சீனாவின் மிக முக்கிய வணிகமாக இருந்து வரும் ரியல் எஸ்டேட் வணிகமானது, கடந்த சில காலாண்டுகளாகவே பெரும் மந்த நிலையில் இருந்து வருகிறது. இது சீன பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வங்கித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடப்பு ஆண்டில் வீடுகளின் விலை 20% குறைந்துள்ளது. இதற்கிடையில் சீன டெவலப்பர்களும் பெரும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
கால நிலை மாற்றம்
சீனாவில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் சீனாவின் தொழிற்துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான வெயில் காரணமாக ஏசிகளின் தேவையானது அதிகரித்தது. இது மின்சார தேவையினை ஊக்குவித்தது. ஏற்கனவே நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தியும் பாதித்தது. இதற்கிடையில் சீன தொழிற்சாலைகளும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
சீன டெக் நிறுவனங்கள் சரிவு
சீனாவின் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு காரணிகளால், சீனாவில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.
சீனாவின் பிரபல டெக் நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் நிகர லாபம் 50% சரிவினைக் கண்டுள்ளது. பல ஆயிரம் ஊழியர்கள் தங்களது பணியினை இழந்துள்ளனர். குறிப்பாக 16 - 24 வயதிற்கு இடையிலான ஊழியர்கள் வேலையில்லாதவர்களாக அதிகளவில் உள்ளனர். இது மேற்கொண்டு உற்பத்தி திறனை பாதித்துள்ளது. இதுவும் சீனாவில் இருந்து தங்களது ஆலையை வேறு பகுதிக்கு மாற்ற காரணமாக அமைந்துள்ளது.
மேற்கண்ட காரணிகள் இந்தியாவினை பாதிக்காது என்றாலும், சீனாவின் தேவை சரிவு இந்தியாவினை பாதிக்கலாம். இந்திய ஏற்றுமதியாளர்களை பாதிக்கலாம். இது இந்திய வளர்ச்சியினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications