ஈரானுக்குஆயுதம் கொடுத்தால் அவ்ளோதான்! சீனாவை மிரட்டும் டிரம்ப்! வெடிக்கப்போகிறதா அடுத்த உலகப்போர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தனது அதிரடி பாணியை தொடங்கி விட்டார். இந்த முறை அவரது டார்கெட் சீனா. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரானுக்கு மட்டும் நீங்கள் ஆயுதங்களை சப்ளை செய்தால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு ஓப்பனாக வார்னிங் கொடுத்துள்ளார் டிரம்ப்.

மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் பதட்டம் உச்சத்தில் இருக்கும் வேளையில், சீனா ஈரானுக்கு முட்டுக்கொடுப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். டிரம்பின் இந்த பிக் ப்ராப்ளம் (Big Problem) எச்சரிக்கை வெறும் வார்த்தைகளா அல்லது சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க போகும் அறிவிப்பா? உலக அரசியலை உலுக்கும் இந்த பரபரப்பான பின்னணி குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

ஈரானுக்குஆயுதம் கொடுத்தால் அவ்ளோதான்! சீனாவை மிரட்டும் டிரம்ப்! வெடிக்கப்போகிறதா அடுத்த உலகப்போர்?

மத்திய கிழக்கில் அமைதி நிலவுமா அல்லது மீண்டும் போர் வெடிக்குமா என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள ஒரு பகிரங்க எச்சரிக்கை உலக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த ஆறு வாரங்களாக நடந்த போர், பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டாததால், எந்த நேரத்திலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப்பிடம், ஈரானுக்கு சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கப் போவதாக தகவல்கள் வருகிறதே என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், சீனா மட்டும் அப்படி செய்தால், அவர்கள் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.என்.என் (CNN) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரான் இந்த போர் நிறுத்த இடைவெளியை பயன்படுத்தி தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த முயல்வதாகவும், அதற்கு சீனா உதவ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பதில் என்ன?

இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் ராணுவத்திற்கு செயற்கைக்கோள் படங்கள் அல்லது செமிகண்டக்டர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என சீன பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாங் சியோகாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு சீராக இருப்பதாக கூறும் சீனா, இந்த விவகாரத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என சாடியுள்ளது.

வெறும் வார்த்தைகளால் மட்டும் மிரட்டாமல், செயலிலும் இறங்க தயாராகிவிட்டார் டிரம்ப். ஈரானுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகள் மீது 50% கூடுதல் வர்த்தக வரி விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

சீனா நேரடியாக ஆயுதங்களை வழங்காவிட்டாலும், ராணுவத்திற்கும் பயன்படுத்தக்கூடிய டூயல் யூஸ் (Dual-use) தொழில்நுட்பங்களை ஈரானுக்கு வழங்கி வருவதாக அமெரிக்கா கருதுகிறது. டிரம்ப் தனது வரி விதிப்பு மிரட்டலை செயல்படுத்தினால், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உறவு மேலும் சீர்குலைய வாய்ப்புள்ளது.
இந்த மோதல் முற்றி மேலும் பிரச்சனையாக மாறுமா அல்லது சீனா பின்வாங்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+