நீல் மோகன், சுந்தர் பிச்சையை வளைத்து போட நினைத்த டிவிட்டர்.. கூகுள் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த பெரிய பெரிய டெக் நிறுவனங்களில் எல்லாம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும், இந்திய அமெரிக்கர்களும் தான் தலைமை வகிக்கின்றனர். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் இந்திய அமெரிக்கரான நீல்மோகன் முக்கிய பதவி வகித்தவர் .குறிப்பாக கூகுளின் விளம்பரம் மற்றும் யூடியூப் பிரிவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.

நீல் மோகன் ஸெரோதா துணை நிறுவனர் நிகில் காமத்துடன் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது கூகுள் நிறுவனம் தன்னை போன்ற தகவல் தொழில்நுட்ப உலகில் சிறந்த விளங்கக்கூடிய ஊழியர்களை தக்க வைப்பதற்காக என்னவெல்லாம் செய்தது என்பது குறித்து விரிவாக தெரிவித்து இருக்கிறார்.

நீல் மோகன், சுந்தர் பிச்சையை வளைத்து போட நினைத்த டிவிட்டர்.. கூகுள் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!

இந்த கலந்துரையாடலின் போது நிகில் காமத்" 2011 ஆம் ஆண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, கூகுள் நிறுவனம் நீங்கள் கூகுளை விட்டு டிவிட்டரி நிறுவனத்துக்கு செல்லக்கூடாது என்பதற்காக 100 மில்லியன் டாலர்கள் வழங்குவதற்கு தயாராக இருந்ததாமே. 15 ஆண்டுகளுக்கு முன்னர் 100 மில்லியன் டாலர் என்பது மிகப்பெரிய தொகை அல்லவா ?" என கேள்வி எழுப்பினார் . அதற்கு ஆம் நீல் மோகன் பதிலளித்திருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் யூடியூப் பிரிவில் நீல்மோகன் பணியாற்றி வந்திருந்தார். அப்போது டிவிட்டர் நிறுவனம் அவரை தங்களுடைய நிறுவனத்தின் சிறப்பு தலைமை அதிகாரியாக நியமனம் செய்வதற்கு முயற்சி செய்தது. இதனை அறிந்த கூகுள் நிறுவனம் நீல்மோகனை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் தொடர்ந்து நிறுவனத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக 100 மில்லியன் டாலர்களை வழங்கியது.

இந்த 100 மில்லியன் டாலர்கள் என்பது நிறுவன பங்குகளில் கணிசமான பங்கினை நீல் மோகனுக்கு வழங்குவதாக கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. நீல்மோகனை பொருத்தவரை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பின்னர் அசெஞ்சர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அதனை தொடர்ந்து நெட் கிராவிட்டி நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார். 2007 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் கூகுள் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் வீடியோ சம்பந்தப்பட்ட பிரிவுகள் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் .2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இவர் உருவெடுத்தார் .

அந்த சமயத்தில் இவரை கைவிட்டு விடக்கூடாது என்பதற்காக கூகுள் நிறுவனம் இவருக்கு 100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வழங்கி இருக்கிறது. நீல்மோகன் மட்டுமல்ல அதே காலகட்டத்தில் சுந்தர் பிச்சையையும் தங்கள் நிறுவனத்தில் வேலை அமர்த்துவதற்கு முயற்சி செய்து இருக்கிறது டிவிட்டர். அந்த சமயத்தில் சுந்தர் பிச்சை கூகுளின் குரோம் செயலிக்கு தலைமை வகித்து வந்தார். அப்போது 50 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை வழங்கி கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சையை தக்கவைத்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிறகு கூகுள் நிறுவனத்தில் நீல் மோகன் மற்றும் சுந்தர் பிச்சை ஆகிய இருவருமே அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தனர். 2023 ஆம் ஆண்டில் யூடியூபின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு நீல் மோகனுக்கு வழங்கப்பட்டது, சுந்தர் பிச்சை தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+