வாஷிங்டன், அமெரிக்கா: கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் டிஜிட்டல் கரன்சிகளின் ஆதிக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் பிட்காயின் எத்திரியம் உள்ளிட்ட கிரிப்டோ நாணயங்களின் மதிப்பு கடந்த ஓராண்டு காலமாகவே படிப்படியாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
கிரிப்டோ கரன்சிகள்: குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோ கரன்சிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டவர். கடந்த ஆண்டு கூட அவரே சொந்தமாக ஒரு கிரிப்டோ டோக்கனை வெளியிட்டார். எனவே பலரும் நம்பிக்கையுடன் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். அண்மையில் கூட பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 1.20 லட்சம் டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

பிட்காயின் மதிப்பு: ஜூலை 19ஆம் தேதி இன்று கூட சர்வதேச அளவில் பிட்காயின் மதிப்பு 1.18 லட்சம் டாலர்களாக இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது ஒரு பிட்காயின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இந்நிலையில் தான் அதிபர் கிரிப்டோ நாணயங்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்த வழிவகை செய்யும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
ஜீனியஸ் சட்டம்: கிரிப்டோ கரன்சிகள் தொடர்பாக அமெரிக்க அரசு கொண்டு வரும் மிக முக்கியமான ஒரு சட்டம் இது. Genius சட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டம் அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றது. ஏற்கனவே செனட் அவையும் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதால் டிரம்ப் இதனை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
புதிய சட்டம்: கிரிட்போ கரன்சிகள், அதற்கான டோக்கன்களுக்கு சட்டரீதியான ஒழுங்குமுறைகளை கொண்டு வர வேண்டும் என கிரிப்டோ முதலீட்டாளர்கள் நீண்ட காலமாக கேட்டு வந்த நிலையில் டிரம்ப் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் நாள்தோறும் எப்படி டாலர்களை பயன்படுத்தி மக்கள் பேமெண்ட்களை செலுத்துகிறார்களோ இனி அதே போல கிரிப்டோ கரன்சிகளையும் கொண்டு பேமெண்ட் செய்ய முடியும்.

ஸ்டேபிள் காயின்கள்: அமெரிக்காவில் டாலரின் மதிப்போடு இணைக்கப்பட்ட கிரிப்டோ டோக்கன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதனை ஸ்டேபிள் காயின்கள் என அழைக்கிறார்கள். அதாவது இத்தகைய ஸ்டேபிள் காயின்களின் மதிப்பு டாலருடன் இணைக்கப்பட்டது என்பதால் மற்ற கிரிப்டோ கரன்சிகளை போல அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருக்காது. அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களும் ஸ்டேபிள் காயின்களை வெளியிட்டுள்ளன. ஆனால் இவை அரசால் ஒழுங்குப்படுத்தப்படவில்லை.
முதல் சட்டம்: அமெரிக்க அரசு தற்போது இத்தகைய ஸ்டேபிள் காயின்கள் வெளியீடு பயன்பாடு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தான் கொண்டு வந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் தயார் செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என டிரம்ப் கூறியுள்ளார். இது கிரிப்டோ சந்தையில் அமெரிக்காவை ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாலருக்கு பதில் ஸ்டேபிள் காயின்: இனி வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் எளிதாக இது போன்ற ஸ்டேபிள் காயின்களை வெளியிட முடியும். மேலும் இத்தகைய கிரிப்டோ நாணயங்களை மக்கள் அன்றாடம் பயன்படுத்தி பேமெண்டுகளை மேற்கொள்ளலாம் அல்லது பெற்று கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கும் . இவை டாலருடன் இணைக்கப்பட்டவை என்பதால் டாலருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. தற்போது மக்களிடையே Tether, USD Coin, Binance USD, PayPal USD ஆகியவை பிரபலமாக இருக்கும் ஸ்டேபிள் காயின்கள் ஆகும்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications