செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தான் தலைவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளார். அந்த வகையில் ஸ்டார் கேட் என்ற 500 பில்லியன் டாலர் மதிப்பிலான செயற்கை நுண்ணறிவு திட்டத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கி வைத்திருக்கிறார்.
ஸ்டார் கேட் திட்டத்தில் சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ, சாஃப்ட் பேங்க் மற்றும் ஒராக்கிள் ஆகிய நிறுவனங்கள் முதல் கட்டமாக 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. அடுத்த ஐந்து நான்கு ஆண்டுகளில் இது 500 பில்லியன் டாலர் முதலீடு கொண்ட திட்டமாக மாறும் என சொல்லப்படுகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை அசைக்க முடியாத இடத்திற்கு கொண்டு செல்லும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் அமெரிக்கா தான் அதில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு திட்டத்தை தொடங்கி வைக்கிறேன் என டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நிலையில் அந்த போட்டியை சமாளிப்பதற்காக தன்னுடைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனக் கூறியுள்ளார் .
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு டேட்டா மையங்கள் தான் மிக முக்கியமான ஆதாரங்கள். எனவே அமெரிக்காவில் டேட்டா மையங்களில் நிறுவுவதற்கு முன்னணி நிறுவனங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும் எனவும் இந்த டேட்டா மையங்கள் இயங்குவதற்கு தேவையான மின்சாரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டேட்டா மையங்கள் நிறுவக்கூடிய நிறுவனங்கள் எந்த கவலையும் இன்றி செயல்படலாம் என கூறியுள்ள டிரம்ப், இவை இயங்குவதற்கு அதிக அளவில் மின்சாரம் தேவை அது கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம், அவர்களே சொந்தமாக மின்சார உற்பத்தி நிலையங்களை அமைத்தாலும் அதற்கு அனைத்து உதவிகளையும் தன்னுடைய அரசு வழங்கும் எனக் கூறியுள்ளார் .செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டம் தான் ஸ்டார் கேட்.
சுகாதார துறையில் தொடங்கி தேசிய பாதுகாப்பு வரை அனைத்து துறைக்கும் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்கான பிரத்யேக டேட்டா மையங்களை நிறுவுவதற்கு ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டிங் சிப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டி இருக்கும். அதற்கான நடவடிக்கைகளில் தான் இந்த மூன்று நிறுவனங்களும் இறங்கியுள்ளன.
ஸ்டார்கேட் திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்க பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி அடையும் என்றும் சொல்லப்படுகிறது. ஒராக்கிள் நிறுவனத்தின் தலைவர் லேரி எலிசன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இருக்கிறது என கூறியுள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் இந்த யுகத்தின் மிக முக்கியமான திட்டமாக ஸ்டார்கேட் இருக்கும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக சுகாதாரத் துறையில் பல்வேறு புதுமைகளை நாம் அனுபவிக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!



Click it and Unblock the Notifications