உலகின் சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்கா பார்க்கப்படுகிறது இதன் தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்து வருகிறார். டிரம்பை பொறுத்தவரை அவருடைய செயல்பாடுகளால் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
அமெரிக்காவில் டிரெண்டாகும் TACO:
அந்த வகையில் டிரம்பையும் அவரின் வரி விதிப்பு செயல்களையும் விமர்சனம் செய்து அமெரிக்காவில் ஒரு வார்த்தை டிரெண்டாகி வருகிறது. TACO என்பது தான் அந்த வார்த்தை Trump Always Chickens Out என்பது தான் இதன் விரிவாக்கம். அதாவது டிரம்ப் வெறும் உதார் மட்டுமே விடுவார் எதுவும் செய்ய மாட்டார் என்பதே இதன் எளிமையான பொருள்.

யார் முதலில் பயன்படுத்தியது?
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளை விமர்சனம் செய்து ஃபைனான்சியல் டைம்ஸில் கட்டுரை எழுதக்கூடிய ராபர்ட் ஆம்ஸ்ட்ராங் என்பவர் தான் முதலில் இந்த பதத்தை பயன்படுத்தியவர். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக பதவியேற்ற உடனே பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார்.
குறிப்பாக சீனாவிற்கு 150 சதவீதத்திற்கும் அதிகமான இறக்குமதி வரியை விதித்தார் பின்னர் அதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இப்படி ஒரு மிரட்டல் விடுவது அதனை செயல்படுத்துவது போல சென்று திரும்ப பெற்றுக் கொள்வது இதைத்தான் கட்டுரையாளர் ராபர்ட் ஆம்ஸ்ட்ராங் Trump Always Chickens Out என்ற பதத்தை பயன்படுத்துகிறார். டிரம்பின் செயல்களால் TACO Trade நடைபெறுகிறது என அவர் கூறியது தற்போது பிரபலமாகியுள்ளது.
TACO Trade என்றால் என்ன?:
அச்சுறுத்தல்: டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை அதிகப்படுத்துவோம் என அச்சுறுத்தினார். ஏப்ரல் 2ஆம் தேதி பல்வேறு நாடுகளின் மீது அதிகபட்ச இறக்குமதி வரியை அறிவித்தார்.
பங்குச்சந்தைகள் இறக்கம்: டிரம்பின் அறிவிப்பை அடுத்து உலகளவில் பங்குச்சந்தைகள் இறக்கம் கண்டன. உலக வர்த்தகமே ஸ்தம்பித்தது, முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தனர்.
வரி விதிப்பு நிறுத்தம்: டிரம்ப் சில தினங்களிலேயே பல்வேறு நாடுகள் மீதும் விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கூறினார்.
மீண்டு வந்த பங்குகள்: டிரம்ப் வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்தியதை அடுத்து பங்குச்சந்தைகள் மீண்டு வந்தன.
டிரம்ப் என்ன சொல்கிறார்?
இதனை தான் TACO Trade என அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக டிரம்பிடமே நேரடியாக கேள்வியும் முன்வைக்கப்பட்டது அதற்கு பதில் அளித்த டிரம்ப் நான் உதார் விடுவதாக கூறாதீர்கள், இது ஒப்பந்த பேச்சுவார்த்தை முறை என கூறியிள்ளார். நான் அதிகபட்ச வரியை விதிப்பேன் ,பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவேன், சற்றே வரியை குறைப்பேன் நம் நாட்டிற்கு சாதகமான ஒரு எண் வரும் வரை இதை நான் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications