கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவி கிடைத்தது.. அடுத்தது என்ன?

ஏதென்ஸ்: பெரும் போராட்டத்திற்குப் பிறகும் கிரஸ் நாட்டிற்கான 3 வருட நிதியுதவி திட்டத்திற்குத் திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸ் நகரில் நடத்த முக்கியக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

அடுத்தது என்ன..

அடுத்தது என்ன..

சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள், கிரீஸ் நாட்டு மக்களை வரி உயர்வு மற்றும் ஒய்வுதிய குறைப்பின் மூலம் அதிகம் பாதிக்கும் வகையில் ஒரு திட்டத்தை வடிவமைத்தது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இத்திட்டத்திற்கு அதிகளவிலான எதிர்ப்புக் கிரீஸ் மக்கள் மத்தியில் வெடித்தது. குறிப்பாக ஒய்வுதியும் பெறுபவர்கள்கிரீஸ் வீதிகளில் போராட்டம் நடத்தினர். இதனால் கிரீஸ் அரசும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

பொது வாக்கெடுப்பு

பொது வாக்கெடுப்பு

இதன் பின்னரே கிரீஸ் நாட்டை ஐரோப்பிய கூட்டணியில் இருந்து விலக்குவது குறித்து மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. இதில் கிரீஸ் நாடு அமோகவெற்றிப்பெற்றது.

மாற்றம்

மாற்றம்

மக்களுக்கு அளிக்கப்படும் ஒய்வுதியத்தைக் குறைக்க மறுத்த கிரீஸ் அரசை, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஒய்வுதிய பிடித்தம் மற்றும் வரி விதிப்பில் சில முக்கிய மாற்றங்களும், நிதிநிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவாக அறிவிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.

சரி நிதியுதவி கிடைத்துவிட்டது.. அடுத்தது என்ன நடக்கும் என்பதற்கான சில கணிப்புகளைப் பார்க்கலாம்.

 

ஓய்வுதியம்

ஓய்வுதியம்

ஏஞ்சலா மெர்கல் மற்றும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் அறிவித்த படி ஒய்வுதிய தொகையில் தேசிய சுகாதாரத்திற்கான பிடித்தத்தை 4 சதவீதத்தில் இருந்து 5% ஆக உயர்த்தப்படலாம்.

அதேபோல் உப பென்ஷன்களில் சுகாதாரப் பிடித்தத்தை 5% ஆகவும், சமுகப் பாதுகாப்புக்காக 3.5% பிடித்தத்தையும் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

 

வாட் வரி

வாட் வரி


கிரீஸ் அரசு வாட் வரியை 3 நிலைகளில் விதிக்கிறது 23%, 13% மற்றும் 6%. இந்நிலையில் ஐரோப்பிய கவுன்சில் அறிவுரைப்படி 23% வரி விதிக்கப்படும் வாட் வரியில் சேவைகள் எண்ணிக்கையைக் கிரீஸ் உயர்த்தலாம்.

மின்சாரம், ஹோட்டல், உணவு

மின்சாரம், ஹோட்டல், உணவு

அதேபோல் மின்சாரம், ஹோட்டல், உணவு பொருட்களின் மீது விதிக்கப்படும் 23% வரியை 13% ஆகக் குறைக்க ஐரோப்பிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் மருந்து மற்றும் புத்தகங்களின் மீது விதிக்கப்படும் 13% வரியை 6% சதவீதமாக அறிவித்துள்ளது.

 

பணக்காரர்களின் மீதான வரி

பணக்காரர்களின் மீதான வரி

50,000 யூரோகளுக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் மக்களுக்கான தேசிய ஒற்றுமைக்கான வரி 8 சதவீதமாக உயர்த்தப்படலாம்.

கார்பரேட் வரி

கார்பரேட் வரி

500,000 யூரோக்களுக்கும் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களின் மீது 12 சதவீத வரி விதிக்கப்படலாம்.

ஆடம்பர வரி

ஆடம்பர வரி

நீச்சல் குளங்கள், விமானம், ஆடம்பர கார்கள் மற்றும் தனியார் படகுகள் ஆகியவற்றின் மீதான வரியை உயரும்.

தனியார்மயமாக்கல்

தனியார்மயமாக்கல்

கிரீஸ் அரசு வைத்துள்ள நிறுவன பங்குகளின் விற்பனை செய்வதன் மூலம் அதிகளவிலான நிதி திரட்ட கிரீஸ் தற்போது திட்டமிட்டிள்ளது.

இதன் மூலம் பல அரசு கட்டப்பாட்டு நிறுவனங்கள் தனியார் நிறுவனமாக மாறலாம்.

 

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறை

பாதுகாப்பு துறைக்குச் செலவிடப்படும் தொகையைக் கணிதமாகக் குறைக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது கிரீஸ்.

பிற திட்டங்கள்

பிற திட்டங்கள்

அரசு பத்திர விற்பனை, புதிய முதலீடுகள் பெறுவதன் மூலம் நாட்டின் நிதி நெருக்கடி அளவை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது கிரீஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+