டெல்லி: துபாய் நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் மூடி சூடா மன்னனாக திகழும் இந்தியா கடந்த 6 மாதத்தில் சுமார் 10.5 பில்லியன் திர்ஹம் முதலீடு செய்துள்ளது.
2014ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் துபாய் மண்ணில் குவிந்த முதலீட்டில் இந்தியா, பிரட்டன், பாக்கிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளின் முதலீடு மட்டும் ஐந்தில் நான்கு பங்காகும்.
முதலீடு
ஜனவரி முதல் ஜூலை மாத காலங்களில் மட்டும் துபாய் மண்ணில் இந்தியர்கள் சுமார் 10.5 பில்லியன் திர்ஹம் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவை தொடர்ந்து பிரட்டன் 5.8 பில்லியன் திர்ஹம், பாக்கிஸ்தான் 4.5 பில்லியன் திர்ஹம் முதலீடு செய்து இரண்டாம் மற்றும் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
துபாய்
இந்தியாவில் விதிக்கப்பட்ட தங்க இறக்குமதி கட்டுப்பாடுகளால் இந்தியர்கள் துபாய் மண்ணில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர், எனினும் நாட்டில் ரியல் எஸ்டேட் துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்கிய நிலையிலே இருந்தது குறிப்பிடதக்கது.
மோடியின் திட்டங்கள்
பிரதமர் மோடி பதவியேற்றிய பிறகு ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிப்பிற்கு அதிகப்படியான முக்கியதுவம் அளிக்கும் வகையில் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல திட்டங்களை வகுத்தார். மேலும் 2025ஆம் வருடத்தில் நாட்டின் கட்டுமானத்துறை சந்தையின் மதிப்பு 5.5 டிரில்லியனாக உருமாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் முதலீடு
இந்தியார்களின் கருப்பு பணத்தை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. இதனால் சுவிஸ் வங்கிகளில் கடந்த 8 மாதங்களில் அதிகப்படியான கருப்பு பணம் வெளிக்கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இப்பணத்தை நாடாளுமன்ற தேர்தலின் போது இந்தியா பங்கு சந்தையிலும் கடன் சந்தையிலும், அன்னிய முதலீட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டது. மீதமுள்ள பணம் வெளி நாடுகளின் ரியல் எஸ்டேட் துறையில் முடங்கியது.
மொத்த முதலீடு
2014ஆம் நிதியாண்டின், முதல் 6 மாதத்தில் துபாய் ரியல் எஸ்டேட்டில் சுமார் 50 பில்லியன் திர்ஹம் முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications