மிச்சிகன், அமெரிக்கா: அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்படி தன்னுடைய விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மாணவரான் சின்மயி தியோரா அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வேலையில் இருக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிலரது விசாக்கள் திடீரென ரத்து செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது.

அப்படி அமெரிக்காவின் வெயின் மாநில பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த நான்கு சர்வதேச மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இவர்களில் இந்தியாவை சேர்ந்த சின்மயி தியோரா என்ற மாணவரும் ஒருவர். இவர் மற்ற மூன்று சர்வதேச மாணவர்களோடு இணைந்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் குடியுரிமை துறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
மிச்சிகன் மாநிலத்தில் செயல்பட்டு வரக்கூடிய பொது பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் பல்வேறு சர்வதேச மாணவர்களும் திடீரென தங்களுடைய எஃப் 1 (F1 visa)மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா அரசு தங்களை நாடு கடத்த திட்டமிடுவதாகவும் புகார் கூறுகின்றனர். சின்மயி தியோராவுடன் சீனாவை சேர்ந்த இரண்டு மாணவர்களும், நேபாளத்தை சேர்ந்த யோகேஷ் ஜோஷி என்ற மாணவரும் இணைந்து அமெரிக்க அரசுக்கு எதிராக தங்களுடைய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்க சிவில் லைபர்டீஸ் யூனியன் என்ற அமைப்பு இவர்களுக்காக வாதிடுவதற்கு முன் வந்திருக்கிறது. இவர்களை நாடு கடத்துவதில் இருந்து தடுக்கவும் இவர்களுக்கு மீண்டும் விசாக்களை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நியாயமற்ற முறையில் பல்வேறு வெளிநாட்டவர்களின் விசாக்களை ரத்து செய்து வருவதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சின்மயி தியோரா 2021ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் வெயின் மாநில பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்தியாவை சேர்ந்த இவருடைய குடும்பம் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹெச் 4 டிபண்டெண்ட் (H4 dependent visa) விசாவில் குடியேறியது. 2008 ஆம் ஆண்டு இவர்கள் இந்தியாவிற்கு திரும்பினார். 2014 ஆம் ஆண்டு மீண்டும் டிபண்டெண்ட் விசாவில் இவர்கள் அமெரிக்காவிற்கு சென்றனர்.
ஹெச் 4 விசாவுக்கான வயது வரம்பை கடந்துவிட்டதால் சின்மயி தியோரா அதனை எஃப் 1 மாணவர் விசாவாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மாற்றி இருக்கிறார் . தற்போது இவரும் இவருடைய குடும்பமும் மிச்சிகன் மாநிலத்தில் தங்கி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு இவர் பட்டப்படிப்பை முடிக்க இருக்கிறார். இந்த சூழலில் தான் திடீரென அவருடைய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில் அமெரிக்காவில் தங்கியிருந்த காலகட்டத்தில் தன் மீது எந்த ஒரு கிரிமினல் குற்றச்சாட்டும் இல்லை என்றும் தன் மீது எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட எதிலும் நான் கலந்து கொண்டதில்லை என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய விசா ரத்து செய்யப்படுவதாக குடியுரிமை துறை அதிகாரிகள் முன்கூட்டியே எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை என கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications