உலகளவில் ரஷ்யா சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாகவும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்து வருகிறது. பொருளாதாரத்திலும் ணுவ பலத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் போட்டியாக ரஷ்யா இருந்து வருகிறது.
உக்ரைனைக்கு எதிரான போரில் ரஷ்யா தனி ஆளாக நிற்க அதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கை கோர்த்த போதும் ரஷ்யாவை அசைக்க முடியவில்லை. இப்படி சக்திவாய்ந்த ஒரு நாட்டினை புதினுக்கு அடுத்ததாக யார் ஆளப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்ய சட்டத்தின்படி ஒரு அதிபர் இரண்டு முறை மட்டுமே ஆட்சி நடத்த முடியும். தற்போது அதிபராக இருக்கும் புதின் ஏற்கனவே சில ஆண்டுகள் அதிபராக இருந்தார் . பின்னர் ரஷ்யாவின் பிரதமராபார், மீண்டும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அதிபரானார்.

2012ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ரஷ்யாவின் அதிபராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் "Russia, Kremlin, Putin, 25 years" என்ற தலைப்பில் ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் புதினின் நேர்காணல் ஒளிபரப்பானது. அதிபர் புதினிடம் உங்களுக்கு அடுத்ததாக இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பது குறித்து முடிவு செய்து விட்டீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்னுடைய வெற்றியாளரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விட்டன என அவர் பதில் அளித்துள்ளார்.
மக்கள் தான் அவரை தேர்வு செய்யப் போகிறார்கள் என தெரிவித்திருக்கும் புதின், இந்த போட்டியில் பலர் இருக்கிறார், அவர்களில் ஒருவரை மக்களே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் பதிலளித்திருக்கிறார். ரஷ்ய நாட்டு அரசியல் சாசனப்படி அதிபர் பதவியில் இருப்பவரால் தன்னுடைய பொறுப்பை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த சமயத்தில் பிரதமராக இருக்கும் நபர் அதிபரின் அதிகாரத்தை செயல்படுத்தும் நபராக இருப்பார்.
தற்போது புதினுக்கு 72 வயதாகிறது. அவருக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கையானவருமாக இருக்கும் பிரதமர் மிட்டிஸ்டீனுக்கு அவர் தன்னுடைய அதிபர் பதவியை விட்டு தரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1999ஆம் ஆண்டு விளாதிமிர் புதின் முதன்முறையாக ரஷ்யா அதிபராக பதவி ஏற்றார். 1999 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த அவர் பின்னர் 2012 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அதிபராக பொறுப்பில் இருக்கிறார்.
புதின் இதற்கு முன் ராணுவ வீரராக இருந்தவர். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கடந்து ரஷ்யாவை முன்னணி நாடாக உயர்த்தி இருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications