யார் இந்த நஜீப் ரசாக்.. மலேசியாவை புரட்டி போட்ட நிதி மோசடி.. இவர் இப்படி செய்யலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தீர்பளித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக், ஆட்சியில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களில், லஞ்சம் பெற்று சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தான், நஜீப் ரசாக்கின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, 216 மில்லியன் டாலர் அபராதமும் விதித்துள்ளது.

காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், ரோலக்ஸ் வாட்ச், தங்க நகை! காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், ரோலக்ஸ் வாட்ச், தங்க நகை!

12 ஆண்டுகள் சிறை தண்டனை

12 ஆண்டுகள் சிறை தண்டனை

முன்னதாக முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரை தொடர்ந்து அவரது மனைவியும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார்.

இது மலேசியா அரசியலிலேயே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாக பணம்

சட்டவிரோதமாக பணம்


நஜாப் இது குறித்து மேல் முறையீட்டுக்கு தாக்கல் செய்த நிலையில், மேல் முறையீட்டினை நிராகரித்துள்ளது.

69 வயதான நஜீப், 1 MDB-ன் முன்னாள் பிரிவான SRC இன்டர்நேஷனல்-லிடமிருந்து சட்டவிரோதமாக சுமார் 10 பில்லியன் டாலர்களை அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோசடி மூலம் ஏமாற்றம்
 

மோசடி மூலம் ஏமாற்றம்

இதற்காக அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்தல், பண மோசடி, மோசடி என பல குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 2020ல் விசாரணை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், மேல் முறையீடு மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் தற்போது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறை தண்டனை அனுபவித்து வரும் நஜீப், தீர்ப்பு வந்த 14 நாட்களுக்குள் மாமன்னரின் மன்னிப்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

1MDB என்றால் என்ன?

1MDB என்றால் என்ன?

அரசு முதலீட்டு நிறுவனமான 1MDB, (1Malaysia Development Behad) , வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 2009ல் 1MDB நஜீப் தலைமையில் தொடங்கப்பட்டதாகும். தற்போது இந்த நிறுவனம் திவாலாகிவிட்டது. இந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்தும் நிதியுதவியை பெற்றுள்ளது.

நஜீப் கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள்

நஜீப் கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள்

இந்த நிறுவனத்தின் மூலம் நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ஒரு புதிய நிதி மாவட்டத்தை உருவாகுதற்கான திட்டம் மற்றும் தனியாருக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை கையகப்படுத்துதல் என பலவும் அடங்கும். எனினும் 2015ல் 1MDB-ல் இருந்து, நஜீப்பின் தனிப்பட்ட கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மாற்றப்பட்டுள்ளதை வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் சுட்டிக் காட்டியது.

உரிமைகோரல்கள்

உரிமைகோரல்கள்

இந்த நிலையில் அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அபுதாபி உள்ளிட்ட நாடுகலை சேர்ந்த பலவும் உரிமைகோரல்கள் மீதான சர்வதேச விசாரணைகள் தொடங்கப்பட்டன. ஆனால் இதனை தொடர்ந்து மறுத்து வந்த நஜீப் தற்போது சிறை தண்டனையும் பெற்றுள்ளார்.

கால்வாசிக்கும் மேல் மோசடி

கால்வாசிக்கும் மேல் மோசடி

அமெரிக்காவின் கருத்துப்படி 1MDB திரட்டிய 6.5 பில்லியன் டாலர்களில் சுமார், 2.7 பில்லியன் டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆடம்பர படகு, விலைமதிப்புமிக்க ஆர்ட்கள், தி வுல்ப் ஆஃப் வால்ஸ்டிரீட் படம் எடுக்கவும் நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பல மோசடிகள் அம்பலம்

பல மோசடிகள் அம்பலம்

இந்த நிதியுதவியினை போலியான நபர்கள் மூலம் சட்டபூர்வ நிறுவனங்களாக மாற்றி, மோசடி செய்தும் அதன் மூலம் தங்களது தனிப்பட்ட கணக்குகளுக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் இதுபோன்ற எண்ணற்ற மோசடிகள் அடுத்தடுத்து அமபலமாகி வருகின்றது. இது மலேசியா அரசியலையும், நிதி துறையும் உலுக்கியுள்ளது மறுபதற்கில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who Is Najib Razak? How 1 MDB Scam shook the financial world?

Who Is Najib Razak? How 1 MDB Scam shook the financial world?/யார் இந்த நஜீப் ரசாக்.. மலேசியாவை புரட்டி போட்ட நிதி மோசடி.. இவர் இப்படி செய்யலாமா?
Story first published: Tuesday, September 6, 2022, 18:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X