எலான் மஸ்க் தனது குடும்பத்தை தனது நிறுவனமான நியூராலிங்க்கின் எக்ஸிகியூட்டிவ் ஷிவான் ஜில்லிஸ் மூலமாக விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்.
2021இல் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும் ஷிவான் ஜில்லிஸ்ஸும் தங்களது இரட்டைக் குழந்தைகளான மகன் ஸ்ட்ரைடர், மகள் அஜுரி ஆகியோரை பெற்றெடுத்தனர். 2024இல் மூன்றாவது குழந்தை பிறந்தது. இது தவிர வெவ்வேறு பெண்களுடன் சேர்ந்து எலான் மஸ்க் 9 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.

முன்னதாக எலான் மஸ்க் தனக்கு விந்து கொடையளிப்பதாகக் கூறியதாக ஜில்லிஸ் கூறினார். யாருமே சுத்தமில்லை. நான் மனித சமூகத்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை தர முயற்சிக்கிறேன் என்று ஒரு முறை எலான் மஸ்க் கூறினார்.
கனடாவின் ஒன்டாரியாவில் பிறந்து வளர்ந்தவர் ஷிவான் ஜில்லிஸ். யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவம் படித்தார். படிக்கும் காலத்தில் கல்லூரியின் ஐஸ் ஹாக்கி அணியிலும் கத்திச் சண்டையிலும் ஈடுபட்டதாக ஜில்லிஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் மஸ்க்கின் ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டபோது ஜில்லிஸும் மஸ்க்கும் சந்தித்துக் கொண்டனர். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸில் ஜில்லிஸ் நல்ல திறனைக் கற்றுக் கொண்டார். அவரது தொழில் பயணம் ஐபிஎம்மில் தொடங்கியது. பின்னர் அவர் புளூம்பெர்க் பீட்டாவில் சேர்ந்தார்.
புளூம்பெர்க்கில் இருந்து 2016இல் ஓபன் ஏஐக்கு மாறினார். படிப்படியாக அந்த நிறுவனத்தின் இளம்வயது டிரைக்டராக ஜில்லிஸ் ஆனார். இந்த நிறுவனம் மஸ்க்குக்குச் சொந்தமானது. இப்போது மஸ்க்கின் மற்றொரு கம்பெனியான நியூராலிங்க்கில் எக்ஸிகியூட்டிவ்வாக உள்ளார். நியூராலிங்க் மைக்ரோசிப் தயாரிக்கும் நிறுவனமாகும்.
அந்த நிறுவனத்தில் ஸ்பெஷல் புராஜக்ட்ஸ்களுக்கான டிரைக்டராக உள்ளார். விமானங்கள், பாதுகாப்புத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற ஏஐ புரோகிராம்களை நியூரோலிங்க் உருவாக்கி வருகிறது. 2021இல் ஜில்லிஸும் மஸ்க்கும் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதேவேளையில் கிரைம்ஸ் என்ற பெண் மூலமாக மஸ்க்குக்கு ஒரு குழந்தை பிறந்தது.
2024இல் ஜில்லிஸ்ஸுக்கும் மஸ்க்குக்கும் மூன்றாவது குழந்தை பிறந்தது. அது பெண்ணா ஆணா என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் உலகில் மக்கள் தொகை குறைவாக இருப்பதை சமாளிக்க முடியும். புத்திசாலித்தனமான மனிதர்கள் அதிக குழந்தைகள் பெற்றால் அவர்களும் புத்திசாலிகளாக ஆகி இந்த சமுதாயத்துக்கு உதவியாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறுகிறார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications