உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா அதன் தலைவரை அதிரடியாக மாற்றியுள்ளது. இதன் மூலம் டெஸ்லா போர்டு இயக்குநர்கள் தலைவர் பதவியில் இருந்து எலன் மஸ்க் நீக்கப்பட்டு ராபின் தென்ஹோல்ம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராபின் தென்ஹோல்ம்
டெல்ஸ்ட்ரா கார்ப்பின் தலைமை நிதி அதிகாரியாக இருந்து வந்த ராபின் தென்ஹோல்ம் தற்போதைய வயது 55. இந்த வயதில் உலகின் மிகப் பெரிய எலக்டிரிக் கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு இவருக்குக் கிடைத்து இருப்பது அனைவருக்கு அச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஜூப்பினர் நெட்வொர்க்ஸ்
ராபின் தென்ஹோல்ம் டெல்ஸ்ட்ரா நிறுவனத்தில் 2017 ஜனவர் மாதம் பணிக்கு சேரும் முன்பு ஜூப்பினர் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்புகளைக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்விஸ் ரோபோடிக்ஸ்
அது மட்டும் இல்லாமல் ஸ்விஸ் ரோபோடிக்ஸ், பவர் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனமான ஏபிபி லிமிட்டட்டின் போர்டு இயக்குநராகவும் இருந்துள்ளார்.
படிப்பு
ராபின் தென்ஹோல்ம் சிட்னி பல்கலைக்கழகத்தில் எக்னாமிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டமும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
டெல்ஸ்ட்ரா
ராபின் தன்ஹோல்ம் டெல்ஸ்ட்ரா நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் டெல்ஸ்ட்ரா மற்றும் டெஸ்லா என இரண்டையும் நிர்வகிப்பது அவருக்குச் சிரமமாக இருக்கும் என்றும் டெல்ஸ்ட்ரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்டி பென் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications