அமெரிக்கா, ஈரானின் மூன்று முக்கிய அணு ஆயுத தளங்களான ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan) ஜூன் 22, 2025 அன்று B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் GBU-57 பங்கர்-பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கியது.
அமெரிக்கா இந்த தாக்குதலை இஸ்ரேலுடன் இணைந்து நடத்தியது, ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நேரடி தலையீட்டை தொடர்ந்து இஸ்ரேல்-ஈரான் மோதல் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. சரி அமெரிக்க ராணுவம் இந்த 3 இடத்தை மட்டும் டார்கெட் செய்ய என்ன காரணம்..?

தாக்கப்பட்ட இடங்கள்
- நடான்ஸ், தெஹ்ரானில் இருந்து 135 மைல் தொலைவில் உள்ள முக்கிய யுரேனியம் மையமாகும், இங்கு 60% தூய்மை யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது. இஸ்ரேலின் முந்தைய தாக்குதல்களால் மேற்பரப்பு கட்டமைப்புகள் சேதமடைந்தாலும், பாதுகாப்பான நிலத்தடி பகுதிகள் இன்னும் செயல்படுகின்றன.
- ஃபோர்டோ, மலைக்கு அடியில் அமைந்துள்ள பகுதி. இது தெஹ்ரானில் இருந்து 60 மைல் தொலைவில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட தளமாகும். இது விமான தாக்குதலுக்கும் பாதிக்கப்படாத வகையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த தளம் 2007 முதல் கட்டப்பட்டு வந்தாலும், 2009ல் தான் உலக நாடுகளுக்கு தெரிய வந்துள்ளது. இதில் 3 இடத்தில் அதிகப்படியான தாக்குதலை எதிர்கொண்ட இடம் இதுதான்.
- இஸ்ஃபஹான், யுரேனியம் மாற்று மையமாகவும் ஆய்வகமாகவும் (uranium conversion) உள்ளது, இங்குஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணிபுரிகின்றனர். இது ஈரான் நாட்டின் அணுசக்தி ஆராய்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பதாக தெரிகிறது.
ஈரானின் அணு திட்டம் உலகளாவிய பாதுகாப்பிற்கு நீண்ட காலமாகமே பெரும் கவலையாக உள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இந்நாட்டின் மீது தடை விதித்துள்ளது. இதுக்குறித்து பல முறை ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவாரத்தை நடத்தி தோல்வியில் முடிந்தது.
நடான்ஸ் மற்றும் ஃபோர்டோவில் உள்ள உயர் செறிவாக்கப்பட்ட யுரேனியம், ஆயுத தரத்திற்கு அருகில் உள்ளது. இஸ்ஃபஹான், ஆராய்ச்சி மற்றும் யுரேனியம் மாற்றத்தை செய்கிறது. IAEA படி, இந்த தாக்குதல்களால் கதிர்வீச்சு கசிவு இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஈரானின் பிற தளங்களான புஷேர் (Bushehr Nuclear Power Plant) மற்றும் ஆராக் (Arak Heavy Water Reactor) ஆகியவற்றில் மின்சார உற்பத்தி மற்றும் புளுட்டோனிய உற்பத்திக்கு பயன்படுகின்றன.
தெஹ்ரான் ஆராய்ச்சி உலை (Tehran Research Reactor): ஆரம்பத்தில் 1967 இல் "அணுசக்தி அமைதி திட்டம்" (Atoms for Peace programme) கீழ் அமெரிக்காவால் வழங்கப்பட்டது, இது இப்போது குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் இயங்குகிறது.
அமெரிக்காவின் ஈரான் அணு தள தாக்குதல்கள், புவிசார் பதற்றத்தையும் எண்ணெய் விலை உயர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்தியா, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உத்திகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், இந்த மோதல் உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

ஈரான்-க்கு அமெரிக்கா, இஸ்ரேல் விட பெரிய ஆபத்து இதுதான்.. ஈரான் மக்கள் பரிதவிக்கும் நிலை வரலாம்..!!

இண்டர்நெட் முதல் சமையல் எண்ணெய் வரை: ஈரான் போரால் அடுத்தடுத்து கிளம்பும் பூதம்!!

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?

ஈரான் போர்: மூக்கறுபட்ட பாகிஸ்தான்..!! அப்போ டிரம்ப் சொன்னது என்ன ஆச்சு?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?



Click it and Unblock the Notifications