உலகம் முழுவதுமே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தே பேசி வருகிறது. ஐடி நிறுவனங்கள் தொடங்கி பல துறைகளிலும் மனிதர்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் இப்போது ஏஐ தொழில்நுட்பம் செய்ய தொடங்கிவிட்டது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை பெரும்பாலும் எந்த வகை வேலைகளை அதிகம் பாதிக்கும் என்பது பற்றி பிரபல ஜெஃப்ரீஸ் (Jefferies) நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும்பாலும் நுழைவு நிலை வேலைகளையே பாதிக்கும் என ஜெஃப்ரீஸ் அறிக்கை எச்சரிக்கிறது. அதாவது வைட் காலர் வேலைகளில் நுழைவு நிலை வேலைகளை எல்லாம் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே பார்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளது. எனவே வைட் காலர் பணிகளில் நுழைவு நிலை வேலைகள் இனி மனிதர்களுக்கு கிடைப்பது கடினம் என கூறியுள்ளது.

அமெரிக்காவில் அண்மையில் பட்டப்படிப்பை முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காதவர்களின் விகிதம் 5.8 சதவீதமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கும் ஜெஃப்ரீஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதின் வருகை இதற்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் நுழைவு நிலையில் இருக்கும் வேலைகளை ஏஐ தொழில்நுட்பத்திடம் ஒப்படைத்துவிட்டன. எனவே அண்மையில் படிப்பை முடித்த பட்டடாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்காமல் என கூறுகிறது. வேலைவாய்ப்பு பெறுவது என்பது இவர்களுக்கெல்லாம் மிக கடினமானதாக மாறிவிட்டது என தெரிவிததுள்ளது.
அடுத்த 1 முதல் 5 ஆண்டுகளில் 50 சதவீத நுழைவு நிலை வைட் காலர் வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வசம் சென்று விடும் என Anthropic நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியன டாரியோ அமோடெய் கூறியுள்ளார். இந்த போக்கு இப்படியே நீடித்தால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் வேகமாக உயரும் என்றும் 10 முதல் 20 சதவீதமாக உயரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மென்பொருள் மேம்பாடு, மார்க்கெட்டிங் துறைகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெஃப்ரீஸ் அறிக்கை இங்கெல்லாம் தான் ஜூனியர் நிலை பணியாளர்கள் அதிகம் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.
தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களில் 7.5 சதவீதம் பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிடததவர்களில் 6.1 சதவீதம் பேரும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர் என அநந் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அண்மையில் தான் ஐபிஎம் நிறுவனம் ஹெச்ஆர் வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒப்படைத்ததாக அறிவித்தது. அதாவது அந்த வேலையில் இருண்ந மனிதர்கள் நீக்கப்பட்டு வேறு பிரிவுகளில்ஊழியர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதாம்.இப்படி பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ள ஜெஃப்ரீஸ் ஏஐ தொழில்நுட்பம் நிறுவனங்களுக்கு வணிகத்தை பெருக்கி கொள்ள வாய்ப்பு தருகிறது, அதே வேலையில் இளம் ஊழியர்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கிறது என கூறியுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications