சீன பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் எதற்காக? இது இந்தியர்களுக்கு வெற்றியா? தோல்வியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய அரசியல்வாதிகள் பலர் இப்போது சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

இது குறித்து ஆய்வு செய்து இந்தியா ஸ்பெண்ட் நிறுவனம் முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. 2011-2012 முதல் இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா 6 வது இடத்தில் உள்ளது.

சீன பொருட்கள் இறக்குமதி

சீன பொருட்கள் இறக்குமதி

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன பொருட்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இதற்கு உதாரணம் விநாயகர் சிலை முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான பொருட்கள் வரை நாம் அனைத்திற்கும் சீனாவின் வர்த்தகத்தை நம்பி உள்ளோம்.

அதே சமயம் 490 பில்லியன் டாருக்கு இறக்குமதி செய்து வந்த சீன பொருட்கள் 380 பில்லியன் டாலர்களாகக் குறைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்திய ஏற்றுமதி

இந்திய ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் 2011-2012 ஆம் ஆண்டு 18 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் இப்போது 9 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து பருத்தி, காப்பர், பெட்ரோலியம் மற்றும் தொழிற்சாலை கருவிகளை மட்டுமே இந்தியா அதிகமா சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

 

சீனாவில் இருந்து கிறக்குமதி செய்யப்படும் போருட்கள்

சீனாவில் இருந்து கிறக்குமதி செய்யப்படும் போருட்கள்

மொபைல், லேப்டாப், சோலார் செல்கள், உரங்கள், விசை பலகைகள், திரைகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள், இயர்போன்கள், போன்று மட்டும் இல்லாமல் காசநோய் மற்றும் தொழுநோய் மருந்துகள், ஆண்டிபையாடிக், குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள், தொழில்துறை சுருள் வில்கள் பந்து தாங்கு உருளைகள், எல்சிடி, எல்ஈடி திரைகள், ரவுட்டர்கள், டிவி ரிமோட் கண்ட்ரோலர்கள் மற்றும் செட் ஆப் பாக்ஸ்கள் போன்றவற்றையும் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

அரசியல் புயல்

அரசியல் புயல்

சரத் யாதவ், பீகார் ஜனதா தளம் (ஐக்கியம்), ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் நிதி அமைச்சர், மற்றும் அனில் விஜ், ஹரியானா சுகாதார அமைச்சர் போன்ற அரசியல் தலைவர்கள் மேட் இன் சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியா சீனா இடையேயான வர்த்தக முறை சீராக இல்லை என்றும் இது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்று கூறுகின்றனர்.

தேக்கமடைந்துள்ள உற்பத்தி புள்ளிவிவரங்கள்

தேக்கமடைந்துள்ள உற்பத்தி புள்ளிவிவரங்கள்

உலகின் மிகப் பெறிய உற்பத்தி நாடாக சீனா மறியுள்ளது என்றும் இதில் இந்தியா தெழியையே சந்தித்துள்ளது என்றும் முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் 2006 ஆம் ஆண்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சீனா பஜார்கள் ஏன் பிரபலமாக உள்ளன?

சீனா பஜார்கள் ஏன் பிரபலமாக உள்ளன?

மும்பையின் இதயமாகப் பார்க்கப்படும் மனிஷ் மர்க்கெட்டில் சீன பொருட்கள் மிகவும் விலை குறைவாகவும், பெரும் அளவிலும், சரியான முறையில் பேக் செய்யப்பட்டும் வாங்கவதற்கு எளிதாகவும் உள்ளது.

ஒரு எல்ஈடி பல்ப் வாங்க வேண்டும் என்றாலும் கூட அதில் 50 வகைகள் உள்ளன. 1980 க்குப் பிறகு சீனா தொழில் துறையில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

 

சீன சந்தை அணுகுதல்

சீன சந்தை அணுகுதல்

இந்தியாவில் ஒரு சந்தையில் சென்று சரியான் பொருட்களை தேர்வுசெய்ய எடுத்துக் கொள்ள ஒரு வாரக் காலம் வரைத் தேவைப்படுகிறது ஆனால் சீனாவில் சந்தை அணுகல் எளிதாக உள்ளது என்றும் இதனால் மூன்று மாதத்திற்கான பொருட்களை ஒரே நேரத்தில் எளிதாக வங்காவும் முடிகிறது என்று கஸ்லிவால் என்ற வியாபாரி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Boycott Calls Against China India’s Largest Trade Partner Will Fail?

Why Boycott Calls Against China India’s Largest Trade Partner Will Fail?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X