சீனாவின் பொருளாதாரத்தைப் புரட்டி போடும் பேய்..!

அண்மையில்தான் சீனாவை பற்றிய வளர்ச்சி முன்னறிவிப்பை சர்வதேச நிதியம்(IMF) வெளியிட்டிருந்தது. சீனாவில் சரிந்துவரும் ரியல் எஸ்டேட் தொழில், கடன்கள் திரும்பச் செலுத்தப்படாமல் இருப்பது, வரலாறுகாணாத வேலையின்மை அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் மந்தமடையும் என அதில் கூறியிருந்தது.

ஜனவரி 2023இல் இருந்து ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு 25 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. இதனால் சீன கரன்சியான யுவானின் மதிப்பை நிலைநிறுத்துவதற்காக பேங்க் ஆப் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சர்வதேச நிதியம் 5.4 சதவீத வளர்ச்சி முன்னறிவிப்பை வெளியிட்டபோதும் சீனாவின் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் இந்த அளவை எட்டுவது கடினமானதாக இருக்கிறது.

சீனாவின் பொருளாதாரத்தைப் புரட்டி போடும் பேய்..!

ரியல் எஸ்டேட் துறைதான் சீனாவின் மொத்த உற்பத்தி அலகுக்கான (GDP) மிகப் பெரிய பங்களிப்பாக உள்ளது. இதில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நிச்சயம் சீனப் பொருளாதாரத்தைப் பாதிக்கும். 2005 ஆம் ஆண்டில் சீன ரியல் எஸ்டேட் மெகா வளர்ச்சியை கண்டது. இன்றைக்கு சீனாவின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 30 சதவீதம் ரியல் எஸ்டேட் துறையில் இருந்துதான் வருகிறது. இது உலகிலேயே மிகப் பெரிய அளவிலான நிதிப் பங்களிப்பாகும்.

இதனிடையே உக்ரைன்- ரஷ்ய போரின் காரணமாக சீன பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையத் தொடங்கி யுவான் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் ரியல் எஸ்டேட் தொழிலின் சரிவு நிற்கவில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்படும் சிறிய சரிவும் சீன ஜிடிபியை அதல பாதாளத்துக்குக் கொண்டு செல்கிறது.

இந்தநிலையில் சீனாவில் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் முதலீடுகளில் கிடைக்கும் லாபம் 7.7 சதவீதம் குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வீடுகள் விற்பனை 5 சதவீதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதங்கள் எல்லாம் சீன அரசின் உத்தரவாதத்திற்கு நேர் மாறாக உள்ளன.

2023 ஆகஸ்ட்டில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் திட்டங்கள் 35 சதவீதம் குறைந்தது. இதே ரியல் எஸ்டேட் துறைதான் 2005-09 காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் மதிப்பு மும்மடங்காக அதிகரித்தது. சுருக்கமாக இன்றைய சீனப் பொருளாதார நிலையை நான்கே பாயிண்டில் விளக்கி விடலாம். அவை-

1. 2005-09 காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் நிகழ்ந்த செயற்கையான ஏற்றத்தால் உலகளவில் முதலீட்டாளர்களின் பார்வை இங்கு திரும்பியது. உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சீன ரியல் எஸ்டேட் துறை லாபகரமாகத் தோன்றியது.
இந்நிலையில் 2007-09 காலகட்டத்தில் உலகளவில் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தபோது சீன ரியல் எஸ்டேட் துறை மட்டுமே ஒரே வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களான Evergrande, Country Garden, Greenland Holdings, Fantasia holdings, Guangzhou R&F, Aoyuan, Modern Land, Sunac, Zongzhi enterprises, Zhongrong International, Sinic Holdings and Kaisa Group இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பல்வேறு ரியல் எஸ்டேட் புராஜெக்ட்களை தொடங்கின. அதேவேளையில் உள்ளூர் டிமாண்ட் குறைவாகவே இருந்தது.

2. LGFV எனப்படும் ஈஸி பேங்கிங் பைனான்ஸிங் மற்றும் லோக்கல் கவர்ன்மென்ட் பைனான்ஸிங் வெஹிக்கில் என்ற திட்டம் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆதரவாக சீன அரசு தொடங்கியது. இத்திட்டம் இரு வழியில் செயல்படுத்தப்பட்டது.

முதலாவதாக ரியல் எஸ்டேட் திட்டங்களை வணிகப்படுத்துவதற்காக தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு எளிதான கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இரண்டாவதாக சீன அரசுக்குப் பலன் தருவதற்காக சில மாகாண அரசுகள் லோக்கல் கவர்ன்மென்ட் பைனான்ஸிங் வெஹிகில்ஸ் திட்டத்தை செயல்படுத்தி அதில் கிடைத்த தொகையை சீன அரசின் இன்ப்ராஸ்ட்ரக்சர் பாண்டுகளில் முதலீடு செய்தன.

சாமானியர்களும் இந்த திட்டத்தால் கவரப்பட்டு கடன் வாங்கி முதலீடு செய்யத் தொடங்கினர். அவர்களைப் பொறுத்தவரை சில வங்கிகள் 100 சதவீத கடனைத் தந்ததால் வீடு வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பாக கருதினர்.

இதன்படி சீனாவில் 80 சதவீத குடும்பத்தினர் இந்த ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்தனர். இதன்மூலம் தங்களுக்கு கொழுத்த லாபம் கிடைக்கும் என்று நம்பிதான் முதலீடு செய்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு இது இல்லாததால் இந்தத் திட்டம் பின்னடைவை சந்தித்தது.

2023இல் இந்த எல்ஜிஎப்வி கடன் திட்டத்தின் விற்பனை உச்சகட்டத்தை எட்டியது. இதனால் மாகாண அரசுகளின் மொத்தக் கடன் அளவு 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களானது. இது சீன பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அபாயமாக உருவெடுத்தது.

3. சீன அரசின் மூன்று சிவப்பு கோடு விதிகளும் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களின் தவறுகளும்- ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான கிராக்கி குறையத் தொடங்கியதால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் நிலைகுலையத் தொடங்கின. நிதியுதவி நிறுவனங்கள் அளித்த கடன்களும் அதிகரித்து ஒருகட்டத்தில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலைகுலைந்து போனதால் தங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை சீன அரசு உணர்ந்தது. இதையடுத்து பொருளாதாரத்தையும் கடன் தந்த நிதி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மூன்று சிவப்பு கோடு விதியை 2020 ஆம் ஆண்டில் சீன அரசு அமல்படுத்தியது.

முதல் விதிப்படி மொத்த சொத்தில் 70 சதவீதத்துக்கு மேல் லயபிலிட்டி இருக்கக்கூடாது. இரண்டாவது விதிப்படி எந்த நிறுவனமும் தனது மொத்தப் பங்குகளில் 100 சதவீதத்துக்கு மேல் கடன் வைத்திருக்கக் கூடாது.
மூன்றாவது விதிப்படி, எந்த நிறுவனமும் குறைந்தபட்சம் தங்களது மொத்த குறுகிய கால கடன்களுக்கு நிகரான ரொக்க இருப்பை வைத்திருக்க வேண்டும். இந்த விதியெல்லாம் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களிடம் செல்லுபடியாகவில்லை.

மூன்றில் ஏதாவது ஒன்றை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர். இதனால் சந்தை முடங்கத் தொடங்கியது.
ஹாங் செங் வங்கியின் முதன்மை பொருளாதாரவியலாளர் வாங் டான் இது பற்றி கூறுகையில் சீனாவில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் ஏற்கெனவே திவால் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகக் கூறினார்.

சில்லறை முதலீட்டாளர்களும் பெரிய அளவில் பணம் கட்டத் தவறினர். இதில் பெரும்பாலானவர்கள் 3-4 ஆண்டுகள் தவணையைச் செலுத்திவிட்டு திட்டத்திலிருந்து விலகிவிட்டனர். இதன் காரணமாக சீனாவில் நிறைய பேய் நகரங்கள் உருவாகியிருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்தக் குடியிருப்புத் திட்டங்கள் எல்லாம் முடிந்துவிட்டபோதும் யாரும் அதை வாங்குவதற்கு முன்வரவில்லை அல்லது யாரும் அங்கு குடியிருக்க வரவில்லை அல்லது குடியிருப்புக்கான தொகையை செலுத்த ஒருவருமில்லை.

இந்த அசாதாரண குடியிருப்பு கடன் சூழ்நிலைக்கு முழு முதற் காரணம் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பாகும். குடிமக்களிடம் வாங்கும் திறனும் அதை எளிதாக விற்கும் வாய்ப்பும் இருந்தால்தானே நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும். ஆனால் சீனாவோ தமது ஜிடிபியை 5.4 சதவீதமாக எட்டுவோம் என்று போலி ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சாமானிய குடிமகனின் ஆண்டு வருமானத்தில் 128 சதவீதம் கடன் இருந்தால் அவர்களது வாங்கும் திறன் நிச்சயமாக குறையத்தானே செய்யும். இது ஜிடிபியை படுமோசமாக நேரடியாக பாதிக்கும்.
அதேவேளையில், விழுந்தாலும் மீசை மீது மண் ஒட்டவில்லை என்ற கதையாக மேலை நாடுகள் விதித்த பல்வேறு வணிக முட்டுக்கட்டைகள், தடைகள் ஆகியவற்றினால்தான் நிலைமை மோசமாகிவிட்டதாக சீன நாட்டு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் ஜாகையை இந்தியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு மாற்றி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் சீனாவின் ஜிடிபி இந்தாண்டு 4 சதவீதத்துக்கும் கீழேதான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீனப் பொருளாதாரம் மீண்டும் மீள்வதற்கு 3-5 ஆண்டுகள் ஆகலாம்.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சீனப் பொருளாதாரம் சில ஆண்டுகளில் நிமிரும் போது தெற்காசியாவில் பின்னடைந்த நிலையில் தான் இருக்கும். அதுவரை சீன குடியிருப்பு திட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள காலி வீடுகளில் பேய்கள்தான் குடியிருக்கும் போல!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+