அமெரிக்காவின் அக்கப்போரும், சீனாவின் வர்த்தகச் சவாலும்.. என்ன செய்யப்போகிறது இந்தியா?

சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போர், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. திடீர் திடீரென வெளியாகும் வெள்ளை மாளிகை அறிவிப்புகள் சீனப் பெருஞ்சுவரை அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. ஆனால் டொனால்டு டிரம்பை குறி வைத்து அதிரடி காட்ட வேண்டிய சீனா, இந்தியாவுக்கு வர்த்தகச் சவாலை உருவாக்கியுள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

இந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் படி உண்மையான வர்த்தகச் சவாலை இந்தியா சந்தித்து வருவதற்கான காரணிகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. 2018 இன் முதல்பாதியில் இந்தியாவின் வர்த்தகப்பற்றாக்குறை 28 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 51 பில்லியன் டாலராக இருந்த சமநிலையின்மையை விஞ்சியுள்ளது. ஆனால் இது நிரந்தரமான வர்த்தகப்பற்றாக்குறை கிடையாது எனச் சீனா காரணம் கற்பித்துள்ளது.

மலிவான ஏற்றுமதி

மலிவான ஏற்றுமதி

ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரையிலான இருவழி வர்த்தகத்தில் 46 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாகவும், இது முதல் 6 மாத வர்த்தகத்தில் 15 சதவீதம் அதிகம் என்றும் சீனாவின் பொதுச் சுங்க நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது. சீனா உயர்ந்த 37 பில்லியன் டாலர் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது- ஆனால் இந்தியாவிலிருந்து 9 பில்லியன் டாலர் அளவில்தான் தாதுக்கள், நூல் மற்றும் இதரப் பொருட்கள் ஏற்றுமதியாகி வருகிறது.

தடுமாற்றமும்- வரிவிதிப்பும்

தடுமாற்றமும்- வரிவிதிப்பும்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக் கூட்டாளியாக உள்ள சீனா, கடந்த ஆண்டு 84 பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் சீனாவின் மிகமுக்கியமான வர்த்தகப்பங்காளியான இந்தியா வர்த்தகப் பற்றாக்குறையில் தள்ளாடுகிறது. இந்தவாரம் இந்தியாவின் நடவடிக்கை வேறு விதமாக இருந்தது. சீனாவின் சோலார் செல்கள் மீது 25 சதவீத காப்பு வரியை விதித்தது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையைத் திறக்க கோரிக்கை

சந்தையைத் திறக்க கோரிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி உகானில் நடைபெற்ற மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த மோடி, மருந்துப் பொருட்கள், அரிசி மற்றும் சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கு வசதியாகச் சீனாவில் சந்தையைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டார். சீனாவில் மருந்தகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு எல்லா வழிகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்தியா நம்புகிறது.

மருந்துகளுக்கு வரி நீக்கம்

மருந்துகளுக்கு வரி நீக்கம்

அமெரிக்காவுடனான வர்த்தகச் சவாலை எதிர்கொண்டுள்ள சீனா, இந்தியாவுக்குச் சில சாதகமான முடிவுகளைப் பரிசீலித்தது. அதன் விளைவாகக் கேன்சர் எதிர்ப்பு மருந்து உட்பட 28 பொருட்களுக்கு விதித்த வரியை நீக்கியது. ஆனால் இது காலதாமதமான ஒரு சிறிய முடிவு என்கிறது இந்திய மருந்துத்துறை. அற்பமான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளது.

இறக்குமதிக்கு வரம்பு கட்ட முடிவு

இறக்குமதிக்கு வரம்பு கட்ட முடிவு

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின் உபகரணங்களுக்கு அதிக வரியை விதிக்க முடிவு செய்துள்ள இந்தியா, சோலார் இறக்குமதிக்கும் வரம்பு நிர்ணயிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியச் சந்தைகளைச் சீனா விரும்புவது போல, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியங்களும் விரும்புகின்றன. அதேநேரம் வர்த்தகச் சமநிலையை உருவாக்க இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யச் சீனா விழைகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவின் தேவைகளைச் சீனா பூர்த்திச் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+