உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் இஸ்லாமாபாத் மீது திரும்பியிருக்க, 21 மணி நேரமாக நீடித்த அந்த முக்கிய பேச்சுவார்த்தை கடைசியில் பல்பு வாங்கிவிட்டது. அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் பிடி கொடுக்க மறுத்ததால், போர் நிறுத்தம் குறித்த நம்பிக்கைகள் தவிடுபொடியாகி உள்ளன.
அமெரிக்க துணை தலைவர் ஜேடி வேன்ஸ், இந்த தோல்வியை மிகப்பெரிய கெட்ட செய்தி என்று வர்ணித்துள்ளது உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்கிறதா? இஸ்லாமாபாத்தில் உண்மையில் நடந்தது என்ன? அதிர வைக்கும் பின்னணி இதோ..

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், குறிப்பாக அணு ஆயுத தயாரிப்பை கைவிட வலியுறுத்தி ஈரான் தாக்குதல் நடத்தப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போரில், இரு தரப்புக்கும் கடும் பொருளாதார, உயிரிழப்பு சேதங்கள் ஏற்பட்டன.
இதனிடையே ஈரான் - அமெரிக்கா இடையிலான போரை நிறுத்த பல நாடுகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த 21 மணி நேர அமைதி பேச்சு வார்த்தையானது தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு நேரடியாக ஈரான் அதிகாரிகள் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தின. இந்த பேச்சு வார்த்தையில் அமைதி ஒப்பந்தம் போடப்படலாம் என பல தரப்பிலும் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் சுக்குநூறாக உடைக்கும் விதமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஈரான் அணு ஆயுதம் குறித்த ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், இதனால் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் வேன்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
இதில் கவலை அளிக்கும் விஷயம் , இந்த தோல்வி அமெரிக்காவை விட ஈரானுக்கு கெட்ட செய்தி. எங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் மிக தெளிவாக கொடுத்து விட்டோம். ஆனால் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் தூது குழுக்கள் பல சுற்றுகளாக விவாதங்களை நடத்தினாலும், ஈரானின் அணு ஆயுத உற்பத்தியில் இரு தரப்புக்கும் இடையே இருந்த இடைவெளியை குறைக்க முடியவில்லை.
உண்மை என்னவென்றால், ஈரான் அணு ஆயுதங்களை தேடாது என்பதற்கும், அணு ஆயுதங்களை விரைவாக உருவாக்குவதற்கு தேவையான கருவிகளை பெற முயற்சி செய்யாது என்பதற்கும் ஒரு உறுதியான உறுதிமொழியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதுவே அமெரிக்க அதிபரின் முதன்மையான இலக்காகவும் உள்ளது. அதைத்தான் நாங்கள் இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் அடைய முயன்றோம். ஆனால் ஈரான் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்த 21 மணி நேர பேச்சுவார்த்தையின் தோல்விக்கு முக்கிய காரணம், ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் நிலவும் உடன்பாடற்ற சூழலே ஆகும். இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய முட்டுக்கட்டைக்கு மிக முக்கியமான காரணமாகவும் அமைந்துள்ளது.
மொத்தத்தில் இனி மீண்டும் பதற்றம் அதிகரிக்கும். அதனால் கச்சா எண்ணெய் விலை, பங்குச் சந்தை, தங்கம் என ஒவ்வொன்றும் வேலையை காட்ட ஆரம்பிக்கலாம். மேலும் மத்திய கிழக்கு பகுதிகளில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும். ஹார்மூஸ் ஜலசந்தியிலும் பிரச்சனையும் அதிகரிக்கலாம். சர்வதேச எரிபொருள் சந்தை இனி என்னவாகும் என்ற கவலையும் எழுந்துள்ளது. இது இந்தியா போன்ற நாடுகளின் அடுப்பங்கரை வரையில் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் ஏற்படுத்த போகிறதோ தெரியவில்லை...
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புது சலுகை: விமான டிக்கெட் விலை குறையுமா?

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications

