வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு பெருமளவில் ஆதரவு தந்தவர் தான் எலான் மஸ்க் . ஒரு காலத்தில் எலான் மஸ்க் டிரம்புக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலின் போது இருவருக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட்டு எலான் மாஸ்க் டிரம்பின் வெற்றிக்காக பாடுபட்டார்.
சுமார் 300 மில்லியன் டாலர்களை டிரம்பின் தேர்தல் பரப்புரைக்காக நன்கொடையாக வழங்கினார் எலான் மஸ்க். அது மட்டும் இன்றி அவருக்காக பரப்புரையிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தலில் தனக்காக பாடுபட்ட எலான் மஸ்கிற்கு தன்னுடைய நிர்வாகத்தில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வழங்கினார் டிரம்ப்.

குறிப்பாக Department of Government Efficiency, or DOGE என்ற பெயரில் அரசு செயல் திறன் துறை எனும் ஒரு தனித்துறையை உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்கை நியமனம் செய்தார் டிரம்ப். அமெரிக்க அரசுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற செலவுகளை குறைப்பது ,அரசு நிர்வாகத்தை வலுப்படுத்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டுதான் இந்த சிறப்பு துறையே தொடங்கப்பட்டது. எலான் மஸ்க் மிகுந்த உற்சாகத்துடன் இதன் தலைவராக பதவி ஏற்றார்.
அரசின் செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சர்ச்சையையும் ஏற்படுத்தின. எலான் மஸ்க் கல்லூரி படிப்பை கூட முடிக்காத சிலரை இந்த துறையின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்தார். அரசின் ரகசிய தகவல்களை கையாளும் உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிக்கன நடவடிக்கைகளையும் எலான் மஸ்க் பரிந்துரை செய்தார். அரசு ஊழியர்கள் தாமாக முன்வந்து வேலையை விட்டு செல்லும் திட்டம் என்பன உள்ளிட்டவற்றை கொண்டு வந்தார். நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
அரசு செயல் திறன் துறையின் தலைவராக பொறுப்பேற்ற போதே அதன் பதவி காலம் ஒரு ஆண்டில் 130 நாட்கள் மட்டுமே இருக்கும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இதன்படி எலான் மஸ்கின் பதவிக்காலம் என்பது மே 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சூழலில் தான் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் "சிறப்பு அரசு ஊழியராக என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த அதிபர் டிரம்பிற்கு நன்றி என குறிப்பிட்டு இருக்கும் அவர் வரும் நாட்களில் அரசு செயல்திறன் துறை இன்னும் வலுவடையும் என்றும் அரசு செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றும்" என்றும் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையிலான நட்புறவு தேர்தலுக்கு முந்தைய காலத்திலும் சரி தேர்தல் முடிந்து டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகும் சரி வலுவாக தான் இருந்தது. ஆனால் தற்போது இருவருக்கும் இடையே சற்று மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தான் டிரம்ப் தலைமையிலான அரசு "one big beautifull bill" என்ற பெயரில் வரி சம்பந்தப்பட்ட ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.
இந்த வரி மசோதா மீது எலன் மஸ்கிற்கு பெரிதளவில் உடன்பாடு இல்லை என சொல்லப்படுகிறது. ஏனெனில் இவர் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய போது இந்த சட்டம் அரசு செலவையும் நிதி பற்றாக்குறையையும் அதிகரிக்கும் என்பதால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என கூறி இருந்தார். ஒரு விஷயம் ஒன்று அழகாக இருக்க வேண்டும் அல்லது பெரியதாக இருக்க வேண்டும், இரண்டுமே இருக்க முடியாது என எலான் மஸ்க் கூறி இருந்தார்.

எலான் மஸ்க் பெரும்பாடுபட்டு அரசு செலவினங்களை குறைக்க நாம் நடவடிக்கை எடுத்தால் இந்த ஒரு மசோதா மீண்டும் செலவினங்களை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக எண்ணுகிறாராம். இது தொடர்பாக டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே சற்றே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் எலான் மஸ்கின் பதவிக்காலம் முடிவடைவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல் திறன் துறை என்பது அரசு செலவினங்களை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது, பல்வேறு அரசு முகமைகளின் செயல்பாடுகளை குறைத்தது இருந்தாலும், சில துறைகளை மறுவடிவமைப்பு செய்தது. எலான் மஸ்க் முதலில் 1 டிரில்லியன் டாலர்கள் வரை அரசு செலவினங்களை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருந்தார். ஆனால் 160 பில்லியன் டாலர்கள் வரை மட்டுமே செலவினை குறைக்க முடிந்தது. இந்த ஒரு மன வருத்தம் எலான் மஸ்கிற்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அரசின் செலவினங்களை குறைப்பது மட்டுமில்லாமல் அரசு நிர்வாகத்தோடு இணைந்து செயல்படுவதில் பல்வேறு சிக்கல்களை எலான் மஸ்க் எதிர்கொண்டார் என ஏபி தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. ஏனெனில் அரசு நிர்வாகத்தில் இவர் புதியவர், இவர் பல்வேறு துறைகளில் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த முயன்றதோடு மட்டுமில்லாமல் அரசுத் துறைகளை மறுவடிவம் செய்வதற்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக அரசுத்துறையில் இருந்த பலருக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக ஏபி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இது ஒருபுறம் இருக்க எலான் மஸ்க் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி தன்னுடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனிக்காமல் விட்டுவிட்டார். டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை குறைந்திருக்கிறது, டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு சரிந்துவருகிறது, முதலீட்டாளர்கள் எலான் மஸ்க் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகி வேறொருவரை நியமிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த சூழலில் தான் நான் டிரம்ப் நிர்வாகத்தில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை இது ஒரு தற்காலிகமான பொறுப்பு தான் நான் கூடிஎய விரைவில் என்னுடைய தொழில்களை கவனிப்பதற்காக திரும்பி விடுவேன் என எலான் மஸ்க் கூறியிருந்தார். அந்த வகையில் தான் தற்போது அவருடைய பதவி காலமும் முடிவுக்கு வந்திருக்கிறது. எலான் மஸ்க் மீண்டும் தன்னுடைய தொழில்களை நோக்கி கவனம் செலுத்த திரும்பிவிட்டார்.
எலான் மஸ்கிற்கு அடுத்ததாக யார் அரசு செயல்திறன் துறையின் தலைவராக இருப்பார்கள் என்ற கேள்வி ஒரு முறை முன்வைக்கப்பட்டதற்கு எலான் மஸ்கே பதில் அளித்திருந்தார். அதாவது புத்த மதத்தை பின்பற்றுவதற்கு புத்தர் நம்முடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அது ஒரு வாழ்க்கை முறை அப்படி தான் அரசு செயல்திறன் துறையும் என கூறி இருந்தார்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications