மாலத்தீவு: மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு பெற்ற அதிபர் முகமது முய்சூவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இது இந்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர் கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிபர் முய்சியின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அவரது கூட்டணி கட்சிகளும் 2 இடங்களை கைப்பற்றியுள்ளன.
தற்போது நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் அதிபர் முய்சூவின் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் 70 இடங்களை கைப்பற்றி அருதி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கைப்பற்றியுள்ளன. மாலத்தீவு அரசியல் சாசன முறைப்படி நாடாளுமன்றத்தில் எந்த கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அந்த கட்சியை சேர்ந்தவர்களே அதிபராக வர முடியும்.
தற்போது தேர்தல் முடிவுகள் அதிபர் முய்சூவுக்கு மேலும் அதிகாரத்தை தந்துள்ளன. இந்த தேர்தல் அதிபர் முய்சுவின் சீன ஆதரவு கொள்கைகளுக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டது. இந்த நிலையில் மக்கள் அவருக்கு பெருமளவில் ஆதரவு தந்துள்ளனர். இது இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் மாலத்தீவு அதிபரான முகமது முய்சு சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.
மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன ஹெலிகாப்டர்கள் ,டார்னியர் என்ற சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்குகிறது. அவற்றை பராமரித்து இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை திரும்பப் பெறுமாறு அதிபர் முய்சு ஏற்கனவே இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் மாலத்தீவு இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது .
தற்போது தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதால் மேற்கொண்டு அவர் சீனாவின் பக்கமே சாய்வார் என்ற என்ற நிலை உருவாகியுள்ளது . மாலத்தீவு இந்தியா உடனான உறவை கைவிட்டு சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது.
அண்மையில் கூட சீனாவிடம் ராணுவ உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் காரணமாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் சீன கடற்படை கப்பல்கள் நுழையலாம் என்றும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
மாலத்தீவு அதிபரின் ஆதரவு போக்கை பயன்படுத்தி சீனா அங்கே ஒரு ராணுவ தளத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் கடல் பாதுகாப்பு மற்றும் முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் சீனா பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications