புதிய எச்1-பி விசா நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு..?

புதிய எச்1-பி விசா நடவடிக்கைகளால் இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்..!

இந்தியா மற்றும் அதன் ஐடி நிறுவனங்களைப் போன்று வேறு எந்த நாடும், வேறு எந்தத் துறையும் அமெரிக்க அதிபரின் டொனால்டு டிரம்பின் அமெரிக்க விசா திட்டங்களால் பாதிக்கப்படப் போவதில்லை.

அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவிற்குத் தங்களது தேவைக்கு அவுட்சோர்ஸ் செய்தனவோ அதை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு இந்திய நிறுவனங்கள் பணப் பார்த்து வந்தன, இதற்காக எச்-1பி விசா பயன்படுத்தி இந்திய ஊழியர்களை அமெரிக்காவிற்கும் அனுப்பி வேலை உறுதி செய்து வந்தன.

ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகளால் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை தலைக்கிலாக மாறும் என்று கூறப்படுகின்றது. அது ஏன் என்று இங்குப் பார்ப்போம்.

ஐடி நிறுவனங்களுக்கான அச்சுரத்தால்

ஐடி நிறுவனங்களுக்கான அச்சுரத்தால்

2015-ம் ஆண்டு மட்டும் எச்-1பி விசாவில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெற்றுள்ளார்கள். இதில் அதிகமானவை ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்காக ஐடி நிறுவனங்கள் பெற்றவை ஆகும்.

எப்படி அவுட்சோர்ஸ் மூலம் அதிக எச்-1பி விசாக்கள் பெறுகின்றனர்

எப்படி அவுட்சோர்ஸ் மூலம் அதிக எச்-1பி விசாக்கள் பெறுகின்றனர்

இந்தியாவின் விப்ரோ மற்றும் அமெரிக்காவின் கானிசண்ட் நிறுவனங்கள் இரண்டும் தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருந்து அதிகமான வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கின்றன.

அவுட்சோர்ஸ் நிறுவனங்கள் பாரம்பரிய தொழில்நுட்ப நிறுவனங்களை விட அதிகப்பட்சமாக எச்-1பி விசாக்களைப் பெறுகின்றன. அதற்கா பிரீமியம் விசாக்கள் பெறும் முறையை இந்த நிறுவனங்கள் அதிகம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் இருந்து அதிகம் எச்-1பி விசா பெற்ற ஐடி நிறுவனங்கள்

இந்தியாவில் இருந்து அதிகம் எச்-1பி விசா பெற்ற ஐடி நிறுவனங்கள்

ஆண்டுக்கு 75 ஆயிரம் எச்-1பி விசாக்கள் மட்டுமே விநியோகிக்கும் நிலையில் அதிக விசாக்களைப் பெற்ற டாப் 5 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் இங்குப் பார்ப்போம்.

1. டாடா - 5,650
2. கானிசண்ட் - 4,293
3. இன்ஃபோசிஸ் - 3,454
4. விப்ரோ - 3,048
5. டெக் மகேந்திரா - 1,81

மேலே கூறப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் கூகுள், மைக்ரோசாட், வால்ட் டிஸ்னி போன்று பல நிறுவனங்கள் எச்-1பி விசா மூலமாக இந்தியாவில் இருந்து ஊழியர்களை அமெரிக்கக் கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்று.

 

டெக் வேலைகளுக்கு அதான் அதிக விசா

டெக் வேலைகளுக்கு அதான் அதிக விசா

வேலை செய்வதற்கான வொர்க் விசா பெற பல நிறுவனங்கள் முயல்வதின் முக்கியக் காரணம் டெக் வேலைக்காகத் தான். 2016 நிதி ஆண்டில் அதிகப்படியாக மென்பொருள் உருவாக்குவது, கணினி அமைப்பு ஆராய்தல் பணிகளுக்கு அதிகமான விசா கோரிக்கைகள் சென்றுள்ளது.

எதனால் இது அமெரிக்கர்களைக் காயப்படுத்துகின்றது

எதனால் இது அமெரிக்கர்களைக் காயப்படுத்துகின்றது

புதிய விசா கொள்கைகளைக் கொண்டு வர முயலும் அதிகாரிகள் மாற்றும் ஆதரிப்பவர்கள் அதிகமாகக் கூறும் ஒரு காரணம் என்னவென்றால் அது அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பாதிக்கின்றது என்பது ஆகும்.

அவுட்சோர்ஸ் நிறுவனங்கள் எச்-1பி விசா மூலம் கொண்டு செல்லும் ஊழியர்களுக்கு 65,000 டாலர்கள் முதல் 75,000 டாலர்கள் வரை தான் சம்பளம் அளிக்கின்றன. இது அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் 100,000 டாலர்களை விடக் குறைவானது. பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் அதிகச் சம்பளத்திற்கு ஊழியர்களைப் பணியில் அமர்த்துகின்றனர்.

 

கிரீன் கார்டு பெறுவதற்கான பாதை

கிரீன் கார்டு பெறுவதற்கான பாதை

எச்-1பி விசா சட்டத்தை முன்பு எழுத உதவிய முன்னால் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் புரூஸ் மோரிசன் இது குறித்துக் கூறும் போது நிறுவனங்கள் தற்காலிக பணிக்காக ஊழியர்களை இங்குக் கொண்டு வருவது தான் சிக்கலாகப் பார்க்கப்படுகின்றது.

நிறுவனங்கள் தற்காலிக ஊழியர்களை எடுப்பதைக் குறைத்து கிரீன் கார்டுடன் நிரந்தர ஊழியர்களாக எடுக்க வேண்டும் என்றும் மோரிசன் கூறினார்.

 

நிரந்தர ஊழியர்களாக எடுப்பதில் உள்ள சிக்கல்

நிரந்தர ஊழியர்களாக எடுப்பதில் உள்ள சிக்கல்

இந்திய நிறுவனங்களுக்கு இங்குத் தான் சிக்கல் உள்ளது. அதாவது அவுட்சோர்ஸ் செய்யும் நிறுவனங்கள் இந்தியா அமரிக்கா என்று ஊழியர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்த விரும்புகின்றன. அதனால் கிரீன் கார்டுகளை எப்போதாவது தான் பயன்படுத்துகின்றன.

நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

ஏப்ரல் முதல் வாரம் வரை எச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பம் பெறப்பட்டு வருவதால் இதற்குப் பழைய விதிகள் தான் பின் பற்றப்படும் என்று கூறப்படுகின்றது.

அதே நேரம் புதிய விசா சட்ட திருத்தம் இன்னும் ஓர் இரண்டு நாட்களில் எடுத்து வந்து பழைய விதிகளை ஒரு ஆண்டுக்குள் முழுமையாக மாற்றிவிட வேண்டும் என்று டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+