கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்றால் அனைவருமே ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், சுற்றுலா செல்ல வேண்டும் , ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் எண்ணுவார்கள் . ஆனால் இங்கே 56 வயதான ஒரு முதியவர் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் இருந்தாலும் தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் வேலையில் அவர் ஈடுபடுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் .
ஜப்பான் நாட்டை சேர்ந்த 56 வயதான நபர் தான் கொய்ச்சி மட்சுபாரா. இவர் வீட்டு வாடகை வருமானம் மற்றும் தன்னுடைய முதலீடுகளில் கிடைக்கும் வருமானமாக மட்டும் ஆண்டுதோறும் 30 மில்லியன் யென் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1.8 கோடி வருமானமாக பெறுகிறார். இருந்தாலும் தான் குடியிருக்க கூடிய பகுதியில் பார்ட் டைம் முறையில் பொது இடங்களை சுத்தம் படுத்தும் தூய்மை பணியாளர் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த வேலைக்காக அவருக்கு மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. இது டோக்கியோவின் சராசரி சம்பளமான இரண்டு லட்சம் ரூபாயை விட குறைவுதான்.

வேலையே செய்யாமல் வீட்டில் உட்கார்ந்திருந்தாலே கோடிக்கணக்கில் வருமானம் வரும் இருந்தாலும் இவர் ஏன் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார் என்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். டோக்கியோவின் பல்வேறு பகுதியிலும் இவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் இவருக்கு மாதம் தோறும் கணிசமான தொகை வாடகையாக வருகிறது. இது தவிர மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார் .அதன் மூலமும் இவருக்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கிறது.
உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்தாலும் இவர் ஏன் தூய்மை பணியில் ஈடுபடுகிறார் என்ற கேள்வி எழுகிறது . சிறுவயதிலிருந்தே வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கொள்கைக்கு உட்பட்டு வாழ்பவர் இவர். பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து ஒரு ஆலையின் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வரை உயர்ந்தாராம். தன்னுடைய வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை சேமித்து வைப்பாராம். பின்னர் அந்த பணத்தை கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கினார்.
படிப்படியாக தான் சேர்த்து வைத்த பணத்தில் ஒன்று இரண்டு மூன்று என அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய அவர் அவற்றை வாடகைக்கு விட்டிருக்கிறார் . இவர் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருப்பதாக கூறுகிறார் . தனக்கான உணவினை அவரே சமைத்துக் கொள்கிறார், புதிதாக துணிமணிகள் எதுவும் வாங்குவது கிடையாது . கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நான் புது துணியே வாங்கவில்லை என கூறும் அவர் எங்கு சென்று வருவது என்றாலும் சைக்கிள் தான் பயன்படுத்துவாராம்.
காலையில் எழுவேன், எனக்கான உணவினை தயார் செய்வேன் இதனை அடுத்து தூய்மை பணியாளராக வேலைக்கு செல்வேன் நான் வேலைக்கு செல்வதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது காரணம் கிடையாது என கூறுகிறார். நமக்கென ஒரு ரொட்டீன் இருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பிசிக்கலாக ஆக்டிவாக இருக்க வேண்டும் இந்த இரண்டு காரணங்கள் தான் என்னை இன்னும் வேலைக்கு செல்ல தூண்டுகின்றன என கூறுகிறார் . ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க வேண்டும் என்பதால் தன்னால் முடிந்த வரை வேலைக்கு செல்வேன் என்கிறார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications