அமெரிக்காவிற்குப் போட்டியாகச் சீனா சக்திவாய்ந்த தொழில்நுட்ப துறையை உருவாக்க வேண்டும் எனப் பெரிய அளவில் முயற்சி செய்து வருகிறது. தொழில்நுட்ப துறையில் சீனா வளர்ச்சி அடைந்தால், அமெரிக்காவின் ஆதிக்கம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
இதன் காரணமாகச் சீனாவின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மறைமுகமாக டிரம்ப் அரசு சீனாவை குறிவைத்து வர்த்தகப் போரை துவங்கியுள்ளது. எதற்கு அஞ்சாத சீனா, பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மீது மீண்டும் வரியை விதித்து அதிர்ச்சியை அளித்தது.
சீனா
ஒரு காலத்தில் சீனா மோசமான தயாரிப்புகளுக்குப் பெயர்போனதாக இருந்தாலும், சமீபத்தில் தரமான பொருட்களை வடிவமைப்பதிலும், உருவாக்குவதிலும் சிறந்து விளங்குகிறது.
மேடு இன் சீனா 2025
இந்நிலையில் சீன அரசு மேடு இன் சீனா 2025 என்னும் மிகப்பெரிய திட்டத்தையும் வர்த்தக முறைகளையும் அறிவித்து அமெரிக்கா, ஐரோப்ப நாடுகளுக்கு ஷாக் அளித்தது. இதன் ஒரு பகுதியாகச் சீனா தற்போது ஆட்டோமேஷன், மைக்ரோசிப்ஸ் மற்றும் ஆள்ளில்லா கார்களைத் தயாரிப்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இயந்திரங்கள்
இதற்கு ஏற்ப சீனாவில் இருக்கும் பல உற்பத்தி நிறுவனங்கள் உலகச் சந்தை தேவைக்கு ஏற்ப மனித தலையீட்டை குறைத்து இயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்து உற்பத்தித் திறனை அதிகரித்து வருகிறது.
முக்கியக் காரணம்
மேலும் நிறுவனங்கள் இயந்திரத்தை நாடி செல்வதற்கு முக்கியக் காரணம், ஊழியர்களின் சம்பளம். பொதுவாக உற்பத்தித் துறையில் உற்பத்தி அளவுகளை அதிகரிக்க வேண்டுமெனில் ஆட்களைத் தேவை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறுவனங்கள் இயந்திரங்களை நம்புவதையே சிறந்த தீர்வாக உள்ளது.
நிச்சயம் வெற்றி
மேடு இன் சீனா 2025 திட்டத்தின் மூலம் புதிய வர்த்தகம், புதிய தொழிலதிபர்கள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் பட்சத்தில் டிரம்ப் எவ்வளவு தடை விதித்தாலும் நிச்சயம் சீனா வெற்றி அடையும் எனச் சீனாவின் தொழில் அமைப்புகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications