அமெரிக்காவில் சீன மொழியான மாண்டரினை கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை 216 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. சீனாவை சேர்ந்த டிக் டாக்(Tik tok) செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கர்கள் டிக் டாக்கை போன்ற மற்றொரு சீன செயலியான ரெட் நோட் (RedNote) செயலியை பயன்படுத்துவதற்காக சீன மொழியான மாண்டரினை கற்று வருகிறார்கள்.
ரெட் நோட் செயலி முற்றிலும் சீன மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே மாண்டரின் மொழியை தெரிந்தால் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் தான் அமெரிக்காவில் பலரும் டியோலிங்கோ (Duolingo) செயலி வாயிலாக மாண்டரின் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அரசு tiktok செயலிக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படக்கூடிய எந்த ஒரு ஆப் ஸ்டோரில் இருந்தும் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கர்கள் டிக் டாக் செயலியை விடுத்து ரெட்நோட் என்ற மற்றொரு சீன செயலிக்கு மாறி வருகின்றனர். கிட்டத்தட்ட 700 மில்லியன் பயனாளர்கள் ரெட் நோட் செயலிக்கு மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை பயன்படுத்த சீன மொழி தெரிய வேண்டும் என்பதால் டியோலிங்கோ எனப்படும் மொழிகளை கற்றுக் கொள்வதற்கான செயலியில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் சீன மொழியை கற்றுக் கொள்ளும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 216 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜனவரி தொடக்கத்திலிருந்து பலரும் சீன மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.
டியோலிங்கோ செயலி குறித்து எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு பலரும் டிக்டாக் செயலி என பதில் அளித்திருக்கிறார்களாம். இதுவே அமெரிக்காவில் டிக்டாக் செயலி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நமக்கு உணர்த்தும்.
சீனாவில் தயாரிக்க கூடிய சமூக ஊடக செயலிகளுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாக கூறும் இந்த துறை சார்ந்த நிபுணர்கள் அதுபோன்ற செயலிகளை அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கினால் சீன செயலிகளின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என கூறுகின்றனர்.
அமெரிக்காவில் ரெட்நோட் செயலியை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் ஜென் ஸீ தலைமுறையினர் என தெரியவந்திருக்கிறது. ரெட்நோட் மூலம் இசையை அடிப்படையாகக் கொண்ட கண்டெண்டுகளை உருவாக்க முடியும். சிறு சிறு வீடியோக்களாக பதிவு செய்ய முடியும். டிக் டாக் , இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகிய மூன்றும் கலந்த கலவையாக ரெட் நோட் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
டிக்டாக் தடை மூலம் சீன செயலிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என அமெரிக்க அரசு நினைக்கும் போது ரெட்நோட் என்ற செயலி வழியாக சீனா தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications