ஏஐ செயலிகளின் பயன்பாடு நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. நமக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தகவல் வேண்டும் என்றாலும் நாம் சாட் ஜிபிடி, ஜெமினி ஏஐ, பெர்பிளெக்சிட்டி போன்ற செயலிகளை பயன்படுத்தி கொள்கிறோம்.
பெரும்பாலான இளைஞர்கள் பதின்ம வயதினர் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு விஷயமாக ஏஐ செயலிகள் இடம் பிடித்து விட்டன . ஆனால் இது கூகுள் நிறுவனத்திற்கு பெரிய ஆப்பு வைத்திருக்கிறது . அண்மையில் அமெரிக்காவில் ஏஐ எதிர்காலம் என்ற பெயரில் ஒரு ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு வயதினர் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற 55 சதவீதம் பேர் சில ஆண்டுகள் முன்பு வரை தங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் வேண்டுமென்றால் கூகுளின் சர்ச் என்ஜினில் தான் சென்று தேடுவோம் ஆனால் தற்போது நாங்கள் எங்களுக்கு தேவையான தகவல்களை சாட் ஜிபிடி ம் ஜெமினி போன்ற சாட் பாட் வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம் எனக் கூறியிருக்கிறார்கள்.

அதாவது 55 சதவீதம் பேர் பாரம்பரிய தேடுபொறிகளை நாங்கள் பயன்படுத்துவதை விட்டு விட்டோம் என தெரிவித்திருக்கின்றனஎ. பிரிட்டனில் நடத்தப்பட்ட இதே ஆய்வில் கிட்டத்தட்ட 62% பேர் நாங்கள் கூகுள் போன்ற தேடுபொறிகளை பயன்படுத்துவதே கிடையாது சாட் ஜிபிடி போன்ற ஏஐ அடிப்படையிலான செயலிகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம் எனக் கூறியிருக்கின்றனர் .
மக்கள் ஆன்லைனில் தங்களுக்கு தேவையான தகவல்களைத் தேடும் முறை பெருமளவில் மாற்றம் கண்டு இருப்பது இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் google செய்து கொள்ளலாம் என்ற நிலைமை தற்போது பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது. ஏனெனில் ஏஐ செயலிகள் நாம் எதிர்பார்க்கக்கூடிய நமக்குத் தேவையான தகவல்களை மட்டுமே வழங்குகின்றன அதே கேள்வியை நாம் கூகுளில் தேடும்போது ஏராளமான தகவல் காட்டும் அதில் ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் ஏஐ செயலிகள் அதனை எளிமையாக்கி இருக்கின்றன மேலும் தனிப்பயனாக்கி தந்திருக்கின்றன என்பதுதான் பெரும்பாலான மக்கள் google சர்ச் எஞ்சினை கைவிட காரணம்.
இது தவிர ஏஐ செயலிகளை ஆறு முக்கியமான விஷயங்களுக்காக மக்கள் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.சுற்றுலா செல்ல வேண்டும் ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என திட்டமிடுபவர்கள் இப்பொழுதெல்லாம் கூகுளில் சென்று ஒவ்வொரு லிங்க் ஆக தேடிக் கொண்டிருப்பது கிடையாது ஏஐ செயலிக்கு செல்கிறார்கள் நான் இந்த ஊருக்கு செல்கிறேன் இத்தனை நாள் தான் விடுமுறை என உள்ளீடு செய்து விட்டாலே அது நமக்கு தேவையான அனைத்து பயணத் திட்டங்களையும் தயாரித்து வழங்குகிறது. எனவே பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுற்றுலா திட்டமிடங்களுக்கு ஏஐ அதிகம் பயன்படுத்துகின்றனர் .
தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சிக்கான விர்ச்சுவல் ஃபிட்னஸ் பயிற்சியாளர்களாக மாறி வருகின்றன ஏஐ செயலிகள். ஏராளமானவர்கள் தங்களுடைய நேரத்தை உள்ளீடு செய்து இவ்வளவுதான் எனக்கு நேரம் இருக்கிறது இதற்குள் நான் என்னுடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்த பயிற்சி செய்ய வேண்டும் என கேட்டால் அது கூறிவிடுகிறதாம்.
எந்த பொருளையும் பரிசாக வழங்குவது என சந்தேகம் இருப்போர் , தொழில்நுட்ப ரீதியிலாக ஒரு லேப்டாப்பில் அல்லது போனில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டது அதனை எப்படி சரி செய்வது, குறிப்பிட்ட இரண்டு பொருட்களை ஒப்பீடு செய்து அதில் எதை வாங்குவது போன்ற கேள்விகளுக்கான பதில்களை பெறுவதற்கு அதிகம் ஏஐ செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்களாம். வேலைக்கு செல்லக்கூடிய பலருக்கும் ஒரு ரைட்டிங் பார்ட்னராக மாறி வருகிறது ஏஐ தொழில் ரீதியிலான மின்னஞ்சலை உருவாக்கி தர பலரும் ஏஐ செயலிகளை பயன்படுத்துகிறார்களாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications