டோக்கியோ: ஜப்பானில் ஊழியர்கள் வேலையை விடுவது மற்றும் அதற்குப் பின்னர் இருக்கும் நடைமுறைகளை கவனித்துக் கொள்வதற்கு என்று புதிதாக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு ஊழியர் குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து தான் வேலை விட்டு விலகுவதாக கடிதம் அனுப்புவதில் தொடங்கி அனைத்து நடைமுறைகளையும் முடிக்கும் வரையிலான சேவைகளையும் வழங்குகின்றன.
ஜப்பானில் இதற்காகவே எக்ஸிட், ஆல்பர்ட்ராஸ் போன்ற நிறுவனங்கள் ராஜினாமா சேவைகளை வழங்குகின்றன. ஜப்பானில் ஒரு வேலையை ராஜினாமா செய்வது என்பது அத்தனை எளிய காரியம் கிடையாது. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் அத்தனை எளிதாக ஊழியர்களின் ராஜினாமாவை ஏற்பது இல்லை. எனவே வேலையை விடும் நடைமுறையை கவனித்துக் கொள்வதற்காகவே பிரத்யேக நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இப்படி வேலையை ராஜினாமா செய்வதற்கான நடைமுறைகளை கவனிக்கும் நிறுவனங்களுக்கு ஜப்பானியர்கள் 10,000 ரூபாய் வரை கட்டணமாக செலுத்துகின்றனர். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எக்ஸிட் நிறுவனம் இதுவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலையை விட்டு விலகுவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றன.
குறிப்பிட்ட நபர்கள் தாங்கள் ராஜினாமா செய்வதாக பணிபுரியும் நிறுவனத்திடம் தெரிவிப்பதில் தொடங்கி அவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் அங்கே வேலை செய்வார்கள் ,அவர்களின் நோட்டீஸ் பீரியட் என்ன, மேலும் நிறுவனம் சார்பில் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் வழங்கப்பட வேண்டி இருக்கிறது என்பன உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்த நிறுவனங்கள் கையாளுகின்றன.
இதனால் ஊழியர்கள் எந்த மனக் கவலையும் இன்றி தங்களது வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு நிறுவனத்தில் சேர்ந்து கொள்ள முடியும். எக்ஸிட் நிறுவனத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஆல்பட்ராஸ் , மெமௌரி உள்ளிட்ட நிறுவனங்கள் இதே போன்ற சேவைகளை வழங்க தொடங்கியுள்ளன.
ஜப்பானில் இந்த சேவைக்கு வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு ஊழியர் தான் வேலையை ராஜினாமா செய்வதாக கூறினால் அதனை ஏற்காமல் அலைக்கழிக்கின்றன. அவர்களே வேண்டுமென்றே நீண்ட காலம் நிறுவனத்தில் பணிபுரிய வைக்கின்றன. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காகவே இப்படி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
மோசமான பணி சூழல்கள் மற்றும், உயர் அதிகாரிகள், போதிய ஊதியம் வழங்காமல் இருப்பது, விடுப்பு வழங்காமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாகவே ஊழியர்கள் தங்களுடைய வேலைகளை விட முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நிறுவன தலைமை அதிகாரிகள் இதுபோல வேலை விடுவதாக கூறுபவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தான் ஜப்பானில் ராஜினாமா சேவை நிறுவனங்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications