உலகம் முழுவதும் போர், பணவீக்கம் என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதற்கு மத்தியில், ஜப்பான், சீனா, இந்தியாவில் சில மாநிலங்கள் என பல இடங்களில் குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது. இது எதிர்காலத்திற்கு உகந்தது இல்லை என்பதை உணர்ந்து பல நாடுகள் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அப்படி ரஷ்யா அரசு தன்நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு அசாதாரண நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான், Ministry of Sex எனப்படும் செக்ஸ் அமைச்சகம் அமைப்பது.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் குடும்ப பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு, தாய்மை மற்றும் குழந்தைப் பருவக் குழுவின் தலைவரும், புடின் ஆதரவாளருமான Nina Ostanina தான் இப்புதிய அமைச்சகம் உருவாக்குவது குறித்து ஐடியாவை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான போரால் பிறப்பு விகிதம் கடந்த 3 வருடத்தில் அதாவது பிப்ரவரி 2022 முதல் வேகமாக குறைந்து வருகிறது. போரில் அதிகப்படியான இளம் தலைமுறையினர் இறந்த காரணத்தால் இந்த நிலை உருவாகியுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. இதனை உடனடியாகவும், வேகமாகவும் சரி செய்ய ரஷ்ய அரசு பல்வேறு அசாதாரண திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது.
இதில் முதலாவதாக, இரவு 10 மணி முதல் 2 மணி வரை இணையத்தை துண்டித்து, லைட்களை ஆப் செய்வதை கட்டாயமாக்குவது மூலம் திருமணமானவர்கள் நெருக்கமாக இருப்பது ஊக்குவிக்கப்படும் என நம்பப்படுகிறது. இதை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
மேலும், அரசு தாய்மார்களுக்கு நிதி உதவி அளிக்கலாம். குழந்தைகளை வளர்ப்பதற்காக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம். அவர்களின் ஓய்வூதிய கணக்கில் இதற்கான பணத்தை நேரடியாக வரவு வைக்கலாம் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இளைஞர்கள் மத்தியில் திருமணத்தையும், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க முதல் டேட்டிற்கு அரசு நிதியுதவி வழங்கப்படலாம். ஒரு ஜோடிக்கு 5,000 ரூபிள் வரை வழங்கப்படலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் திருமணம் செய்துக்கொள்ளபவர்களுக்கு ரஷ்ய அரசு 26,300 ரூபிள் வரை நிதியுதவி வழங்கப்படலாம் என்றும், இந்த தொகையை ஹோட்டல் செலவுகளுக்கும் மற்றவைக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோல் அரசு பணியில் இருக்கும் பெண்கள் அரசு கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு மறுக்காமல் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பதில்களில் இருந்து தான் ரஷ்ய அரசு ஆய்வு செய்து நிதியுதவி மற்றும் பிற முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் மறுக்காமல் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரஷ்ய அரசின் இந்த அசாதாரண நடவடிக்கைகள் ரஷ்யாவின் மக்கள்தொகை சரிவை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய வழிகளை அரசு தீவிரமாகத் தேடி வருகிறது. இந்த திட்டங்களின் செயல்திறன் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, Khabarovsk என்னும் பகுதியில் 18 முதல் 23 வயதுடைய பெண் மாணவிகளுக்கு குழந்தை பிறந்தால் ரூ.97,311 வரை நிதியுதவி வழங்கும் திட்டத்தை ரஷ்ய அரசு துவங்கியுள்ளது. இதேபோல் Chelyabinsk பகுதியில் இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் முதல் குழந்தைக்கு ரூ.9,19,052 வரை வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி அல்லது ஊக்கத்தொகை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும்.
ஜப்பான் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கப் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தில் சலுகை, ஜப்பான் வரும் வெளிநாட்டினர் குழந்தை பெற்றுக்கொண்டால் மாதம் மாதம் நிதியுதவி, மருந்து செலவுகளில் தள்ளுபடி போன்றவற்றை வழங்குகிறது.
இதேபோல் சீனாவில் பள்ளி கல்வி துறையில் அதிகளவிலான இலவசங்களை கொண்டு வந்துள்ளது. பணவீக்கத்தை குறைத்துத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதேபோல் வீட்டிற்கு 1 குழந்தை என்ற கொள்கையைப் பல தசாப்தங்களுக்கு பின்பு நீக்கியுள்ளது. அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக்கொள்வோருக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications