அமெரிக்கா: சர்வதேச அளவில் மென்பொருள் துறையில் இந்தியர்களே கோலோச்சி வருகின்றனர். அதற்கு முன்னோடியாக இருப்பவர் தான் ஆனந்த் யார்டி.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர் அண்மையில் அமெரிக்காவில் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளார்.

சாப்ட்வேர் டைக்கூன் என அறியப்படும் ஆனந்த் யார்டி அண்மையில் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். வீ வொர்க் (we work ) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மே 31 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் துறையில் துறையில் வெற்றிகரமான ஒரு தொழில் முனைவோராக அறியப்படுபவர். 1963ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐஐடி ஜேஈஈ நுழைவுத் தேர்வில் முதலிடத்தை பிடித்தவர்.
1968 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆனந்த் யார்டி, அங்கே யார்டி சிஸ்டம்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். சொத்து மேலாண்மைக்கான ஒரு சாப்ட்வேர் நிறுவனமாக யார்டி சிஸ்டம்ஸ் 1984 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.
தற்போது யார்டி சிஸ்டம்ஸ் நிறுவனம் ஓராண்டுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவராக ஆனந்த் யார்டி இடம் பிடித்துள்ளார்.
யார்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே வீ வொர்க் நிறுவனத்தில் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார் . அண்மையில் கூட இவர் கூடுதலாக இந்த நிறுவனத்தில் 337.5 மில்லியன் டாலர்களை முதலீடு நிறுவனத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.
இதனிடையே கடந்த மே 30ஆம் தேதி அமெரிக்க நீதிமன்றம் வீவொர்க் நிறுவனம் திவாலானதாக அறிவித்தது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை கடன் வழங்கியவர்களுக்கு மற்றும் யாரடி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக வீ வொர்க் நிறுவனத்தின் திவால் மனு மீது நடைபெற்ற விசாரணையின் போது கூடிய விரைவில் நிறுவனம் திவால் நிலையிலிருந்து மீண்டு வந்து விடும் என நிறுவனம் சார்பாக வாதிட்ட ஸ்டீவன் சிராஜெடினி என்ற வழக்கறிஞர் கூறினார்.
அமெரிக்காவில் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்பட்டு வந்தது வீவொர்க். ஆனால் இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமளவு நஷ்டத்தை சந்தித்தது.
அதிகப்படியான கடன் ஆனால் எந்த வருவாயும் இல்லாமல் இயங்கி வந்த இந்த நிறுவனம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திவாலானதாக அறிவிப்பு வெளியிட்டது.
நிறுவனத்தை மீட்டெடுக்க பல்வேறு திட்டங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்கப் பட்ட போதிலும் ஆனந்த் யார்டியின் திட்டத்துக்கு அனுமதி தந்து நிறுவன பொறுப்பும் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனந்த் யார்டி கூடிய விரைவில் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்ற போவதாக தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications