சீனாவை சேர்ந்த 41 வயதான ஐடி நிபுணர் ஒருவர் நான்காண்டு காலமாக தான் தன்னுடைய மின்சார வாகனத்திலேயே வசித்து வருவதாக வெளியிட்டிருக்கும் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஸாங் யுன்லாய் என்ற சீனாவை சேர்ந்த ஐடி நிபுணர் ஒருவர் தன்னுடைய சொந்த ஊரில் நான்கு அடுக்கு கொண்ட சௌகரியமான வீடு இருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக தான் தன்னுடைய மின்சார வாகனத்திலேயே வசிப்பதாக தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மின்சார வாகனத்திலேயே வசிப்பதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் தனக்கு 12 லட்சம் ரூபாய் மிச்சமாகி இருப்பதாகவும் தனக்கு பெரிய அளவில் சுதந்திரம் இருப்பதாக உணர்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு ஸாங் தன்னுடைய வீட்டில் இருந்தபடியே ஐடி நிறுவனம் ஒன்றில் ரிமோட் முறையில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கிறது. பின்னர் அவருக்கு வேறு ஒரு நகரத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது . இதனை அடுத்து அவர் அந்த நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அதற்காக அவர் மாதம் 29 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டி இருந்தது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் அவர் சொந்தமாக ஒரு மின்சார காரை வாங்கி இருக்கிறார். அதன் பின்பக்கத்தில் இருக்கைகளை நீக்கி மெத்தை ஒன்றை போட்டு படுக்கையாக மாற்றினார். இதனை அடுத்து தன்னுடைய வசிப்பிடமாகவே மின்சார காரை மாற்றி இருக்கிறார். தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை காலி செய்த அவர் பகலில் வேலைக்கு செல்வது இரவில் மின்சார காரிலேயே தூங்குவது என வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்.
தன்னுடைய மின்சார காரில் ஏசி உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் தனக்கு அதுவே சௌகரியமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கே சென்று சாப்பிட்டு விடுவாராம். ஜிம்மில் சென்று குளித்து விடுவாராம், உள்ளூரை சேர்ந்த சார்ஜிங் நிலையங்களுக்கு சென்று தன்னுடைய வாகனத்தையும் சார்ஜ் செய்து விடுவாராம். அங்கே இருக்கக்கூடிய பூங்காக்களில் இருக்கும் பொது கழிப்பறைகளை இவர் பயன்படுத்திக் கொள்வாராம்.
வார இறுதி நாட்களில் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று தன்னுடைய சொந்த வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவாராம். இப்படி ஒரு வாழ்க்கை முறைக்கு மாறியதன் காரணமாக இவர் ஒரு நாளைக்கு 1500 ரூபாய் செலவை மிச்ச படுத்தி இருக்கிறார் ஒட்டுமொத்தமாக இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இவர் 12 லட்சம் ரூபாயை சேமித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications