அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட் 1500 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அமெரிக்கர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
அண்மையில் தான் வால்மார்ட் நிறுவனம் ஹெச்1பி விசா முறையில் 3 ,800 ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கான அனுமதியை பெற்றது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் திடீரென இந்த நிறுவனம் 1500 பேரை வேலையில் இருந்து நீக்குவதன் காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வால்மார்ட் செயல்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 1.6 மில்லியன் ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நிறுவனத்தின் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களில் 1500 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக சில தினங்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு வெளியானது. ஆனால் வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்துவிட்டு வெளிநாட்டவர்களை அந்த பணியில் அமர்த்துகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
இதற்கு காரணம் அண்மையில் தான் வால்மார்ட் நிறுவனம் 3800 வெளிநாட்டவர்களை ஹெச்1பி விசா மூலம் பணி அமர்த்துவதற்கான அனுமதியை பெற்றது. வெளிநாட்டை சேர்ந்த திறன் மிகு ஊழியர்கள் அமெரிக்காவில் சென்று பணி புரிவதற்கு வழங்கக்கூடிய ஒரு விசா தான் இது. அமெரிக்காவில் செயல்படக்கூடிய பல்வேறு டெக் நிறுவனங்களும் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்ந்துவதற்கு இந்த விசாவையே பயன்படுத்துகின்றன. இந்தியர்களே இந்த விசா மூலம் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்கின்றனர்.
இந்த விசாவில் அமெரிக்காவிற்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டு ஊழியர்கள் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி பணி புரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது . அதே வேளையில் வால்மார்ட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருப்பவர் சுரேஷ்குமார். அவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கிறார். இதை முன்வைத்துதான் பல்வேறு அமெரிக்கர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய சந்தேகத்தை முன்வைக்கின்றனர்.
அதாவது வால்மார்ட் நிறுவனம் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்துவிட்டு ஹெச்1பி விசா மூலம் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த இருக்கிறது என்ற குற்றச்சாட்டை பலரும் முன் வைக்கின்றனர். ஆனால் தங்கள் நிறுவன செயல்பாடுகளை சீரமைக்கவும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவுமே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதாக வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சுரேஷ்குமார், தலைமை செயல் அதிகாரியான் ஜான் பார்ட்னரும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வால்மார்ட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் இந்தியாவிலிருந்து ஹெச்1பி விசா மூலம் பணிக்கு வந்தவர்கள் என்ற ஒரு தகவலையும் பல்வேறு அமெரிக்கர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இதற்கிடையே வால்மார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தொழில்நுட்ப பிரிவில் மட்டும் பணிநீக்கம் நடைபெறவில்லை இ-காமர்ஸ் ,விளம்பர பிரிவு ஆகியவற்றிலும் பணிநீக்கம் நடைபெறுகிறது.இதில் ஹெச்1பி விசா மூலம் யாரும் பணியில் அமர்த்தப்படுவதில்லையே என வால்மார்ட்டுக்கு ஆதரவாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வெளிவருகின்றன.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications