அமெரிக்காவில் பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் மே 2025 (Oxford Economics may 2025) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் அண்மையில் பட்டப்படிப்பை முடித்த 22 இல் இருந்து 27 வயது உட்பட்ட பட்டதாரிகள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர் என்றும் இது அமெரிக்க அரசுக்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது.
தேசிய அளவிலான வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் பேர் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் என அந்த அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 12 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் இங்கே வந்து தங்கி பயின்று தங்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர் என அமெரிக்கர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதேபோல அதேபோல ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது. அண்மையில் கூட சீன மாணவர்களின் விசாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதேபோல மாணவர் விசா பெறுவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக தற்போது மாற்றப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைகழக நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க அண்மையில் தடை விதித்தது. அமெரிக்க பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிப்பதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஃபிரஷர் நிலையில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாமல் இருக்கின்றன. 2022ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 22 முதல் 27 வயதுக்கு உட்பட்ட கணினி அறிவியல் மற்றும் கணித பாடப் பிரிவுகளில் பாடங்களைப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கணிசமாக குறைந்து இருக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை வேலை வாய்ப்பு குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்க பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு நிறுவனங்களும் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைத்திருக்கின்றன. 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு நிறுவனங்கள் ஊழியர்களை குறிப்பாக கம்ப்யூட்டர் சிஸ்டம் டிசைன் உள்ளிட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான பிரிவுகளில் வேலைக்கு ஆட்களை புதிதாக எடுப்பது 40 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. இதுவும் அண்மையில் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்.
கடந்த பத்து ஆண்டுகளில் கணினி அறிவியல் பிரிவு நல்ல வேலை வாய்ப்பு தருகிறது என்பதால் பலரும் அதில் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு சந்தையில் நுழைகின்றனர். ஆனால் தற்போது ஐடி உள்ளிட்ட துறைகள் ஏஐ காரணமாக மாற்றமடைந்திருக்கின்றன. இதனால் அங்கே மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு சுருங்கி வருகிறது. ஆனால் அந்த துறையில் வேலை வாய்ப்பு வேண்டும் என வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications