வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட முன்னிலையில் வகிக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தான் பேசும் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்பவராகத் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இழந்த வேலைவாய்ப்புகளைக் குடியரசு கட்சியின் ஆட்சியில் அமெரிக்கா கண்டிப்பாக மீட்டு அமெரிக்கக் குடிமக்களுக்குத் திருப்பி அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெறும் விதத்தில் டொனால்டு டிரம் பேசி வருகிறார்.
இதற்கு என்ன பொருள்..?
அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டவர்களை ( இந்தியர்களை) பணியில் துரத்திவிட்டு அமெரிக்கர்களையும், ஆப்ரிக்கா அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே அவர் கருத்துக்குப் பின்னால் இருக்கும் முழுமையான விளக்கம்.
டொனால்டு டிரம்ப் கருத்து
சீனா, மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளிடம் நாம் இழந்த மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளைக் கண்டிப்பாக மீட்க வேண்டும் இதனாலேயே ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தன்னை அதிகளவில் ஆதரிப்பதாகவும் டொனால்டு டிரம்ப் சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அதுமட்டும் அல்லாமல் ஆப்பிரிக்க - அமெரிக்கத் தலைவர் பேசுகையில் எம் மக்கள் அனைவரும் டிரம் போன்றவர்கள் என்று கூறுவார்கள் எனவும் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்.
58 சதவீதம்
ஆப்பிரிக்க - அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதம் பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இது மிகவும் மோசமான நிலை இவர்களின் வாழ்வாதாரத்தைக் கண்டிப்பாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள்
டொனால்டு டிரம்ப் ஏப்போதும் சீனா, மெக்சிக்கோ, ஜாப்பான் போன்ற நாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். கடந்த மாதம் கூட இந்திய சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்வதுமில்லை, கவனிப்பதுமில்லை எனக் கூறினார்.
ரியல் எஸ்டேட்
மேலும் டொனால்டு டிரம்ப் இந்திய ரியல் எஸ்டேட் மீது தீராத ஆசை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications