அமெரிக்கா சீனா இடையேயான புகைச்சல் என்பது இன்றும் அரசல் புரசலாக இருந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா சீனாவுக்கு சிப் ஏற்றுமதியினை கட்டுப்படுத்தியுள்ளது. இது சீனாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், சீனா தற்போது சிப் உற்பத்தியினை அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
உலகின் முன்னணி பொருளாதார நாட்டினை வீழ்த்த பெய்ஜிங் தனது முயற்சியினை எடுத்து வருகின்றது.
சிப் உற்பத்தியில் சரிவு
இது உலகின் மிக வலுவான ஒரு தொழிற்சாலையாக இருந்து வரும் நிலையில் கூட, சீனாவின் டெக் நிறுவனங்கள் சிப் உற்பத்தியில் பின் தங்கியிருப்பதை இது சுட்டிக் காட்டுகின்றது.
இது மேலும் சீனா உலக அளவில் டிஜிட்டல் சக்தியாக மாறும், அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சீனா விஞ்சி, சீனா முதல் பொருளாதார நாடாக மாறும் என்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கை வீழ்ச்சி காணலாம் என ANI செய்தியினை எட்டி காட்டி தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
சிப்-கள் நவீன பொருளாதாரத்தின் அடித்தளமாகும். ஒரு யுவான் மதிப்பிலுள்ள சிப்கள், 10 யுவான் மதிப்புள்ள மின் திறனை ஆதாரிக்கும். இது 100 யுவான்களின் பொருளாதார உற்பத்தியினை உருவாக்க முடியும் என்றும் தோராயமான மதிப்பீடு உள்ளது. ஆக சீனா அமெரிக்காவிடம் இருந்து மதிப்பிட முடியாத அளவுக்கு அழுத்தத்தினை எதிர்கொள்கிறது.
உரிமம் பெறுவது கட்டாயம்
ஆக இந்த வகையில் ஸ்மார்ட்போன் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் இன்றியமையாததான செமிகண்டக்டர் துறையில், சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா செய்து வருகிறது எனலாம். கடந்த அக்டோபர் மாதத்தில் சில விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்தது. அதில் உலகின் எந்த மூலையில் இருந்து சிப்-கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி, அவற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு உரிமங்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சூப்பர் கணினிகள் தொடங்கி செயற்கை நுண்ணறிவு மற்றும் ராணுவ தளவாடங்களில் இந்த மேம்படுத்தப்பட்ட சிப்கள் பயன்படுகின்றன. சீனா இந்த தொழில்நுட்பத்தை சொந்தம் கொண்டாடுவது தனது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இந்த புதிய விதிகள் ராணுவப் பயன்பாடுகளுடன் கூடிய உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை, சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது
சீன நிறுவனங்களுக்கு தடை
அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடுகளை சீனா தொழில்நுட்ப பயங்கரவாதம் என்று விமர்சித்தது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சீனாவின் மிக முக்கிய சிப் உற்பத்தியாளர் உள்பட பல சீன நிறுவனங்களை வர்த்தக தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செக்
இதற்கிடையில் தான் செமிகண்டக்டர்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்து உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்காவிற்கு எதிராக சீனா புகார் அளித்தது.
இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் சீனாவுக்கு மேலும் உபகரணங்கள் கிடைப்பதை தடுக்கம் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜப்பானுடன் கைகோர்த்தபோது கடந்த மாதம் கட்டுப்படுத்த முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. இதற்கிடையில் இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இது குறித்தான சட்டம் அமலுக்கு வரலாம் என தெரிகின்றது. ஐரோப்பாவின் மொத்த சிப் உற்பத்தியில் சுமார் 20% ஆகும்.
சீனா குற்றம்
இதனால் சீனா எவ்வளவு இழப்பினை காணும் என்பது குறித்தான தகவல்கள் என்பது வெளியாகவில்லை. எனினும் அமெரிக்கா தனது வணிக மேலாதீகத்தினை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications