வாஷிங்டன், அமெரிக்கா: நெருங்கிய நண்பர்களாக இருந்த எலான் மாஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்பி இடையிலான வார்த்தை மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்பும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கும் ஒருவரை ஒருவர் வசை பாடிய வண்ணம் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டார். டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல கோடி ரூபாயை நன்கொடையாகவும் வழங்கினார்.

இதனை அடுத்து அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் தன்னுடைய முக்கியமான நிகழ்வுகளில் எல்லாம் எலான் மஸ்கை உடன் வைத்திருந்தார். மேலும் அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக அமெரிக்க அரசு செயல் திறன் துறை எனும் ஒரு புதிய துறையை உருவாக்கி எலான் மஸ்க்கிடம் அதன் தலைவர் என்ற பொறுப்பினை வழங்கினார். இப்படி இருவருக்கும் இடையிலான நட்பும் நம்பிக்கையும் வலுவாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.
தன்னுடைய அரசு செயல் திறன் துறை மூலமாக அரசு செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் எலான் மஸ்க். ஆனால் அண்மையில் புதிய வரி வரி மசோதாவை டிரம்ப் நிர்வாகம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த வரி மசோதா அரசின் செலவினங்களை அதிகரிக்கும் மேலும் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளையும் குறைக்கும் வகையில் உள்ளது என இது குறித்து அதிருப்தி தெரிவித்து எலான் மஸ்க் பேசி வருகிறார்.
இதன் காரணமாக டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கு இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து இருக்கின்றன. எலான் மஸ்கின் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவிகளை நிறுத்துவோம் என டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவை கண்டன. இப்படிப்பட்ட சூழலில் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதில் அமெரிக்காவில் 80 சதவீத மக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய வகையில் ஒரு புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதா என கேள்வி எழுப்பி எக்ஸ் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் அமெரிக்காவில் புதிய அரசியல் கட்சி தேவை என வாக்களித்துள்ளனர்.
மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விட்டனர் இதுதான் விதி என பதிவு செய்திருக்கும் எலான் மஸ்க், கட்சியின் பெயர் தி அமெரிக்கன் பார்ட்டி என அறிவித்திருக்கிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் அமெரிக்கன் பார்ட்டி என்பது டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications