ஜப்பான்: 2025 ஜூலை மாதம் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி தாக்கும் என புதிய பாபா வாங்கா என அழைக்கப்படும் ஜப்பானை சேர்ந்த காமிக்ஸ் கலைஞரின் கணிப்பு தான் உலகம் முழுவதும் பேசு பொருளாக இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த ரியோ டட்சுகி என்பவர் ஒரு மங்கா கலைஞராக இருக்கிறார். அவர் காமிக்ஸ் புத்தகத்தின் மூலம் பிரபலமான ஒரு கலைஞர். 1999 ஆம் ஆண்டு the future I saw என்ற காமிக்ஸ் புத்தகத்தை அவர் எழுதி இருந்தார். அதனை 2021ஆம் ஆண்டு அப்டேட் செய்து மறுபதிப்பை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது ஜப்பான் முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது.

தன்னுடைய புத்தகத்தில் அவர் 2025 ஜூலை மாதம் ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கடல் கொந்தளிக்கப் போகிறது என பதிவு செய்துள்ளார். தன்னுடைய காமிக்ஸ் மூலம் எதிர்காலத்தில் நிகழ இருக்கும் இயற்கை பேரிடர்களை வெளிப்படுத்துபவர் என பலரும் இவரை புகழ்கின்றனர். 2011 ஆம் ஆண்டு வரை அவருடைய இந்த புத்தகம் பெரிய அளவில் மக்களிடையே புகழடையவில்லை. ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்ந்து ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றால் சுமார் 18,000 பேர் தங்களுடைய உயிர்களை இழந்தனர்.
இதனை அவர் தன்னுடைய காமிக்ஸில் குறிப்பிட்டிருந்தாராம். அதன் பின்னர் தான் இவருடைய புத்தகம் மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதற்கு முன்னர் கூட அவர் தன்னுடைய காமிக்ஸில் 1995 ஆம் ஆண்டு கோபில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் கொரோனா பெருந்தொற்றை கூட குறிப்பிட்டிருந்தாராம். மேலும் உலக புகழ்பெற்ற பிரிட்டன் இளவரசி டயானாவின் மரணத்தைக் கூட இவர் முன்கூட்டியே கணித்ததாக சொல்லப்படுகிறது.
இவர் எழுதிய புத்தகம் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம் சீன மொழியில் கூட இது மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அவருடைய கணிப்புகள் அனைத்துமே நிகழ்வதால் மக்கள் அவரை ஜப்பான் நாட்டை சேர்ந்த பாபா வாங்கா என்றும் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கிறார்கள். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய புத்தகத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டு இருக்கிறார். அதில் 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் ஜப்பானுக்கு தென்பகுதியில் இருக்கும் கடல் கொந்தளிக்க போகிறது மிகப் பெரிய சுனாமி உருவாகப் போகிறது எனக் கூறியிருக்கிறார்.
கடல் நீருக்கு அடியில் மிகப்பெரிய ஒரு பூகம்பம் ஏற்பட போகிறது என்றும் ஜப்பான், தைவான் மற்றும் இந்தோனேஷியா நாடுகள் இதன் மூலம் பாதிக்கப்பட போகிறது என்றும் கூறுகிறார் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட இந்த முறை உருவாகக்கூடிய சுனாமி அலைகள் மூன்று மடங்கு உயரமானதாக இருக்கும் என இவருடைய காமிக்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இது ஜப்பான் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலாத்துறை இதனால் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கி இருக்கிறது. பல்வேறு டிராவல் ஏஜென்சிகளும் ஜப்பானுக்கு செய்யப்பட்ட முன்பதிவுகளில் சுமார் 50 சதவீதம் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறுகின்றன. ஜப்பானுக்கு முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது எனக் கூறுகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களில் ஜப்பானுக்கான சுற்றுலா திட்டங்களை யாரும் முன்னெடுக்க மாட்டார்கள் என்றும் சுற்றுலாத்துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்கள் கூறுகின்றன.
இதனிடையே ஜப்பான் அரசு, வெளியிட்டுள்ள பதிலில் ஜப்பான் நாட்டு ஆய்வு மையம் ஜூலை மாதம் சுனாமி ஏற்படுவதற்கும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என இதுவரை தெரிவிக்கவில்லை என கூறியிருக்கிறது ஜப்பான் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஒரு நாடு என்றும், அந்த காமிக்ஸில் கூறும் தகவலுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டு அரசே இவ்வாறு கூறினாலும் ஜப்பான் நாட்டு நெட்டிசன்கள் #july2025prediction என்ற ஹேஸ் டேக்கை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர் பலரும் இந்த கணிப்பு தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். சில இடங்களில் மக்கள் நிலநடுக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டதாக பதிவு செய்கிறார்கள். சிலர் அவசரகால தேவைக்கு பயன்படக்கூடிய பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவருடைய கணிப்பு உண்மையோ பொய்யோ ஆனால் அதனால் ஏற்பட்டிருக்க கூடிய உளவியல் ரீதியான தாக்கம் என்பது மிக அதிகமானதாக இருக்கிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications