அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இந்த பரிசு டிரம்புக்கு கிடைக்குமா என டிரம்ப் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. நார்வேயில் இருக்கும் நோபல் பரிசு குழுவினர் இந்திய நேரப்படி நண்பகல் 2.30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு செல்ல இருக்கிறது என்பதை வெளியிட இருக்கின்றனர்.

உலகிலேயே மிக உயரிய விருதாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது . பல்வேறு பிரிவுகளிலும் லட்சக்கணக்கான மக்களின் நலன்களுக்காகவும் அமைதிக்காகவும் பாடுபட்ட நபர்களை தேர்ந்தெடுத்து தான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருது மிகப்பெரிய அளவில் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
டிரம்ப் தான் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு பொருத்தமானவர் என தொடர்ச்சியாக கூறி வருகிறார் . தான் அதிபராக பதவி ஏற்றதில் தொடங்கி பல்வேறு போர்களை நிறுத்தி இருப்பதாகவும் எனவே இந்த விருது பெறுவதற்கு தானே பொருத்தமான நபர் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். நோபல் கமிட்டி இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு செல்கிறது என்பதை இன்று அறிவிக்க இருக்கிறார்கள்.
முன்னதாக நோபல் கமிட்டியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றனர். டிரம்பினை பொறுத்தவரை நோபல் பரிசு அவருக்கு கிடைக்கவில்லை என்றால் அவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்பது தான் தற்போது பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு என்பது பொதுவாக யாருடைய தாக்கத்திலும் வழங்கப்படுவது கிடையாது, பல்வேறு தரப்பினரும் குறிப்பிட்ட நபர்களுக்கு அல்லது குறிப்பிட்ட அமைப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்யலாம். ஆனால் இதற்கான கமிட்டி தான் அதில் இறுதி முடிவு எடுக்கும். ஆஃல்பிரெட் நோபல் அவர்களின் உயிலில் குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்றி தான் இந்த முடிவு எடுக்கப்படும்.
இரு தினங்களுக்கு முன் தான் டிரம்ப் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை வெற்றி கரமாக கொண்டு வந்தார். இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை பெற்று தருமா என்றால் இந்த ஆண்டு கிடையாது ஏனெனில் அதற்கு முன்னதாகவே யாருக்கு பரிசு என்பதை தீர்மானித்து விட்டார்கள் அடுத்த ஆண்டு வேண்டுமென்றால் வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது.
டிரம்ப் இந்தியா - பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு போர்களை நிறுத்தி இருப்பதாக கூறி வருகிறார். அண்மையில் ஐநா பொது சபையில் உரையாற்றிய போது கூட எனக்கு தான் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்தார். இது தவிர நார்வே நாட்டு அமைச்சர்களை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவர் தொடர்ந்து அழுத்தம் தருவதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேல், பாகிஸ்தான் நாட்டு பிரதமர்கள் கூட டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
More From GoodReturns

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications