சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. இந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது சீனாவின் நோக்கம். மக்கள் தொகை அடிப்படையிலும், உற்பத்தி சார்ந்த துறையிலும், உலகிலேயே முன்னணி நாடாக சீனா தான் இருக்கிறது. இந்த சூழலில் தான் சீனாவிற்கு செக் வைக்கும் படி அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார்.
சீனாவின் உற்பத்தி துறைக்கு இந்த வரி விதிப்பு நடவடிக்கை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவை நாம் இரண்டு விதமாக அணுக வேண்டும் ஒருபுறம் நவீன தொழில்நுட்பங்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சீனா , மற்றொன்று பொருளாதார ரீதியாகவும் உற்பத்தி துறை சார்ந்த இயங்கக்கூடிய சீனா. இரண்டுமே சீனாவின் முக்கியமான இரண்டு பக்கங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் என்றாலே அமெரிக்கா தான் என்ற நிலை இருந்ததை சீனா தன்னுடைய புதிய நிறுவனங்களின் மூலம் மாற்றி அமைத்து இருக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் டீப்சீக் என்ற செயலியை வெளியிட்டு அமெரிக்க நிறுவனங்களை நிலைகுலைய செய்தது. மின்சார வாகன உற்பத்தியில் பிஓய்டி நிறுவனம் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. இப்படி தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்து சீனா வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த என்விடியா என்ற ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான ஜென்செங் ஹுவான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தும் காலம் வந்துவிட்டது என ஏற்கனவே கூறியிருக்கிறார். அந்த வகையில் சீனாவின் ஒருமுகம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் தகவல் தொழில்நுட்ப துறையிலும் அமெரிக்காவுக்கு கடும் போட்டியாக உருவாகி இருக்கிறது. அதே வேளையில் சீனாவின் மற்றொரு முகம் உற்பத்தி துறை சார்ந்து இயங்கக்கூடியது.
அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் அமெரிக்க பொருட்களுக்கு தேவையான உற்பத்தி மையம் சீனா என கூறலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பல்வேறு பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. அங்கே பல்வேறு பொருட்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. இதனால் பணவாட்ட பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது மற்றொருபுறம் மக்கள் நுகரும் போக்கு குறைந்துவிட்டது வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது பல்வேறு இடங்களில் வீடுகள் கட்டி விற்பனையாகாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன.
இந்த சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் கொடுத்த வர்த்தக போர் சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தது. பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான பொருட்கள் சீனாவிலேயே தேக்கமடையும் சூழல் உண்டானது . அமெரிக்கா சீனாவை இந்த இரண்டு விதமாகவும் பார்த்து அணுக வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த டாங் ஜெயிலிங் என்ற நிபுணர் தெரிவிக்கிறார்.
14 ஆண்டு காலம் தான் சீனாவில் தங்கி இருந்து அங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தொடர்பான பாடங்களை எடுத்ததாகவும் சீனாவின் நிலையை ஆய்வு செய்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கும் அவர் சீனாவில் பல்வேறு முகங்கள் இருக்கின்றன பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன அதை கடந்து தான் அந்த நாடு உற்பத்தி ரீதியாகவும் தகவல் தொழில்நுட்ப ரீதியிலாகவும் முன்னேறி வருகிறது என கூறுகிறார்.
நியூயார்க் டைம்ஸில் கட்டுரை எழுதியுள்ள அவர் சீன அரசாங்கம் தன்னுடைய பல்வேறு மானியங்கள் மற்றும் தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் வாயிலாக பெரும்பாலான பணத்தை உற்பத்தி துறைக்கு செலவு செய்துவிட்டது. ஆனால் தற்போது அந்த துறை அங்கே மந்தமடைந்து இருக்கிறது என குறிப்பிடுகிறார். ஏஐ தொழில்நுட்பத்தில் சீனா ஆதிக்கம் கொண்ட நாடாக மாறுவது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறுகிறார். ஏனெனில் சீனா பொருளாதாரம் பெரும்பாலும் உற்பத்தி துறை சார்ந்த மட்டுமே இயங்குகிறது என கூறுகிறார்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் சீனாவில் 150 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாகிறது. இந்த வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு 150 மில்லியன் பேரையும் பாதிக்கும் என கூறுகிறார். சீனாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 சதவீதமாக இருக்கிறது இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 17 சதவீதமாக இருக்கிறது என கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் 12 மில்லியன் பேர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். எனவே சீனா தற்போது இக்கட்டான சூழலை எதிர்கொண்டு இருக்கிறது என்கிறார்.
சீன அதிபர் ஸீ ஜின் பிங், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவது, சரிவடைந்து வரும் உற்பத்தி துறையை மேம்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களில் சீனாவை உயர்த்துவது, வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை போக்குவது என அடுத்தடுத்த சவால்களை திறமையாகவும், அமெரிக்க அதிபர் டிரம்பை கவனமாகவும் கையாள வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications