மெக்டோனால்ட் உணவு நிறுவனத்தின் நிர்வாகிகள் இளம்பெண் கொடுத்த ஆர்டரை வாங்க மறுத்ததை அடுத்து அந்த பெண் ஜன்னல் வழியாக ஏறி குதித்து தனக்கான உணவை சமைக்க தொடங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உணவகத்தில் பணி நேரம் முடிந்து விட்டது என்றும் எனவே ஆர்டர் வாங்க முடியாது என்றும் தெரிவித்ததால் அவர் ஆத்திரத்தில் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
மெக்டொனால்டு உணவகம்
உலகம் முழுவதும் மெக்டொனால்டு உணவகம் மிகவும் புகழ் பெற்றது என்பதும் நாம் விரும்பிய உணவை ஆர்டர் செய்தால் சுவையுடன் தரமான உணவு கிடைக்கும் என்பதால் பலர் அந்த உணவகத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆர்டரை வாங்க மறுத்த மெக்டொனால்டு
இந்த நிலையில் ஒரு பெண் மெக்டொனால்டில் சாப்பிட மிகவும் ஆசைப்பட்டார், அவர் விரும்பிய ஆர்டர் கிடைக்காதபோது அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக அந்த பெண் ஜன்னல் வழியாக ஏறி சமையலறைக்குள் புகுந்தார்.
வீடியோ வைரல்
இதுகுறித்த வீடியோ முதலில் டிக்டாக்கில் வெளியிடப்பட்ட பின்னர் அது மற்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், அந்த பெண் மெக்டொனால்டு உணவகத்தில் உள்ள ஊழியர்களுடன் சேர்ந்து தனக்கான உணவை தயார் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
ஆர்டரை எடுக்காதது ஏன்?
மெக்டொனால்டு ஊழியர்களிடம் உணவு கேட்டு அந்த பெண் ஆர்டர் செய்த போது பணி நேரம் முடிந்துவிட்டது என்றும், அதுமட்டுமின்றி கையுறைகள் பற்றாக்குறையால் தாங்கள் எந்த உணவையும் தயாரிக்கவில்லை என்று ஊழியர்கள் அவரிடம் காரணம் கூறுகிறார்கள். ஆனால் அந்த பெண் சமாதானம் அடையாமல் தனக்கான உணவை தானே தயாரிக்க முடிவு செய்தார்.
பெண்ணின் வேண்டுகோள்
இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது, பல நெட்டிசன்கள் அந்த பெண்ணை தனது ஆர்டரை சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து கூறினர். ஒரு பயனர் 'அந்த பெண் மிகவும் வேடிக்கையாக இருக்கிறார் என்று கூறினார். இன்னொருவரோ இதை ஒரு ஆண் செய்திருந்தால் அந்த ஆண் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கூறினார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது, பல நெட்டிசன்கள் அந்த பெண்ணை தனது ஆர்டரை சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து கூறினர். ஒரு பயனர் 'அந்த பெண் மிகவும் வேடிக்கையாக இருக்கிறார் என்று கூறினார். இன்னொருவரோ இதை ஒரு ஆண் செய்திருந்தால் அந்த ஆண் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications