ஒரே நாளில் சுமார் ரூ.5 கோடி செலவு செய்த பெண்.. சாக்லேட்டுக்காக மட்டும் ரூ.26லட்சம் செலவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்து : இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண் அதுவும் விலையுயர்ந்த ஆபரணம், மதிப்புமிக்க பேஷன் ஆடைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைக்கு 16 மில்லியன் பவுண்டுகளை செலவளித்துள்ளதாகவும் அதுவும் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலவளித்துள்ளதாகவும் ஹாராட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அட ஆமாப்பு Zamira Hajiyeva என்ற பெண் ஒரே நாளில் 6 லட்சம் பவுண்டுகளை செலவு செய்துள்ளதாகவும், அதிலும் சாக்லேட்களுக்காக ஒரு நாளில் 30,000 (சுமார் ரூ.26 லட்சம் )பவுண்டுகளை செலவு செய்ததாகவும், இதை பார்த்த கடை உரிமையாளர்களே ஸ்டன் ஆகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நம்ம ஊருல இந்த காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரின்னு சொல்வாங்களே அப்படி தான்.

அதோடு விட்டார அவர் அதிக விலைமதிப்புமிக்க ஆபரணங்களையும், அதுவும் 55 வயதான ஒரு பெண், விலைமதிப்புமிக்க ஆபரணங்களுக்கும், பேஷன் ஆடைகளுக்கும் சுமார் 5.75 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்திருப்பது அனைவரின் பார்வையிலும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியதாம். விடுவாங்களா சும்மா?

குதூகலத்தில் மனைவி

குதூகலத்தில் மனைவி

இந்த நிலையில் அந்தம்மா யார் என்ன என்று விவரிக்கையில், Azerbaijani bankerல் வேலை பார்த்த Jahangir Hajiyev மனைவிதான் இந்த அம்மனியாம். அட ஆமாப்பு ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 15 வருடம் ஜெயில் தண்டனைல இருக்கிறாராம். அந்த குதூகலத்தில் தான் அம்மணி இப்படி ஆட்டம் போட்டிருக்கிறார்.

சொத்து எப்படி வந்தது?

சொத்து எப்படி வந்தது?

இப்போது குட்டு வெளிப்பட்டு என்ன செய்வதென்று தவித்தும் வருகிறாராம் அம்மணி, அது மட்டுமா? அரசனை நம்பி புருஷனை நம்பி கைவிட்ட மாதிரி, புருஷன் ஜெயில்ல இருந்தாலும் அவர் சம்பாதிச்சு வச்ச சொத்து இருக்கே நிம்மதியா இருக்கலாம் என்று இருந்த அம்மணியிடம், கொஞ்சம் கொஞ்சமாக அரசு நோண்ட ஆரம்பித்துள்ளதாம்.

சொல்லு, உண்மைய சொல்லு பணம் ஏது?
 

சொல்லு, உண்மைய சொல்லு பணம் ஏது?

ஆமாப்பு அது எப்படி வந்துச்சு? இவ்வளவு பணம் எப்படி கிடைச்சது? என சராமாரியாக கேள்விகள் வந்துகிட்டே இருக்காம். இப்பதான் அம்மணிக்கு புரிஞ்சிருக்கு? புருஷன் எவ்வவு கஷ்டப்பட்டிருக்கிறார்ன்னு? இந்த நிலையில் சும்மா கிடந்த சங்க ஊதிக் கெடுத்த மாதிரி, அமைதியா தூக்கிட்டு இருந்த அரசாங்கத்த அம்மணி எழுப்பி விட்டுங்களாம். அட ஆமாப்பு இப்ப பழைய கதையெல்லாம் தோண்ட ஆரம்பிச்சுட்டாங்களாம்.

பதிலளிக்காத தம்பதிகள்

பதிலளிக்காத தம்பதிகள்

ஏற்கனவே கடந்த அக்டோபரில், Knightsbridge உள்ள 11.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீடும், அதே சமயம் பெர்ஷயரில் உள்ள உள்ள 10.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள கோல்ஃப் கிளப்பும் எப்படி வங்கினீங்கன்னு அரசிடம் இருந்து நோட்டீஸ் வந்திருக்காம். அதற்கு கணவன் மனைவி இருவருமே இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம். இந்த நிலையில் மீண்டும் தூசிதட்டி பிரச்சனைய ஆரம்பிச்சிட்டாங்களாம்.

ஒன்னு ரெண்டு இல்லைங்க 35 கிரெடிட் கார்டு

ஒன்னு ரெண்டு இல்லைங்க 35 கிரெடிட் கார்டு

அப்பாவது நம்ப அம்மணி சுதாரிச்சிருக்க கூடாது. நம்மல வாட்சு பண்றாங்கன்னு. இப்ப அவஸ்தை படுறாங்க? இது மட்டும் பிரச்சனை இல்லங்க கணவன் மனைவி இருவரும் உபயோகித்த 35 கிரெடிட் கார்டுகளின் வரவு செலவு செய்த 95 பக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிட்டிருக்காம்.

பொம்மைகளுக்காக 1 மில்லியன் பவுண்டு

பொம்மைகளுக்காக 1 மில்லியன் பவுண்டு

அதுல என்ன கவனிக்கவேண்டிய விஷயன்னா? ஆடம்பர நகைக்கடைகளுக்காக 4 மில்லியன் பன்வுடுகளையும், கார்டியர் வாட்ச் மற்றும் நகைகள் மீது 1.75 மில்லியன் பவுண்டுகளும், பொம்மைகளுக்காக 1 மில்லியன் பவுண்டுகளையும் செலவு செய்துள்ளார்களாம் இந்த சுவாரஷ்ய தம்பதிகள்.

பேஷன் ஆடைகளுக்காக லட்சம் பவுண்டுகள்

பேஷன் ஆடைகளுக்காக லட்சம் பவுண்டுகள்

பல ஆயிரக்கணக்கான பவுண்டுகளை ஆடம்பரத்திற்காகவே செலவு செய்துள்ளனர். குறிப்பாக பேஷன் மற்றும் ஆடைகளுக்காக 1,31,000 பவுண்டுகளும், டென்னிஸ் பஷோவிற்கு 1,44,000 பவுண்டுகளையும், மற்றும் பிற செலவுகளுக்காக லட்சக்கணக்கான பவுண்டுகளையும் செலவு செய்துள்ளனராம் இந்த தம்பதிகள்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரே முறையில் வாங்கப்பட்ட சாக்லேட்களுக்காக மட்டும் 30,000 பவுண்டுகளையும், ஒயினுக்காக 2400 ஒரே ஸ்டோக்கில வாங்கி இருக்காங்கலாம் இந்த பெஸ்ட் கபில்ஸ்.

சுவிஸ் வங்கியிலும் டெபாசிட் இருக்கு

சுவிஸ் வங்கியிலும் டெபாசிட் இருக்கு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த தம்பதிக்கு சுவிஸ் வங்கியிலும் டெபாசிட் இருக்காம். அட ஆமாப்பு மனுசன் ரொம்ப பொருப்பாதான் இருந்திருக்கிறார். என்ன பன்ன அம்மனி கோட்ட விட்டுட்டாங்களே.

கணவன் தவறில் மனைவிக்கு பங்கு இல்லை!

கணவன் தவறில் மனைவிக்கு பங்கு இல்லை!

இதுல ஒரே ஒரு சந்தோஷம் என்னன்ன? அம்மணிக்கு அவங்க கணவர் செய்த தவறில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அம்மணிய விட்டுட சொல்லி நீதிபதி தீர்ப்பு சொல்லி இருக்காராம். அதோட அம்மணி இப்பல்லாம் செலவு செய்யற ரெம்பவே குறைச்சிட்டாங்களாம். அதோட முழுச விசாரணைக்கு ஒத்துழைப்பும் கொடுக்கிறாங்களாம். பூனைக்கு சூடுபட்டதாம் தெரியுங்கிறது சரியாத்தான் இருக்கு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: london
English summary

Woman 'spent £30,000 (apx Rs.26 laks) on chocolate in one day

Luxury jewellery, designer fashion and perfume worth a combined £16m were bought from UK.
Story first published: Thursday, May 30, 2019, 13:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X