உலக வங்கி பல நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக நிதியுதவி அளித்து வருகிறது. இத்தகைய கடன் உதவி ஒரு நாட்டிகோ அல்லது தனிப்பட்ட மாநிலங்களுக்குக் கூட அளிக்கப்படும், அப்படித் தமிழ்நாட்டுக்கு கூட உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.
உலக வங்கி
இந்நிலையில் பல்வேறு காரணிகளை ஆராய்ந்து உலக வங்கி, வருகிற 2019ஆம் ஆண்டில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்கு நிதியுதவி செய்யக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளது.
மகிழ்ச்சி
உலக வங்கியின் இந்த முடிவுக்கு உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிளைமேட் சேஞ்ச்
12க்கும் அதிகமான உலக நாடுகளின் தலைவர்கள், நிறுவன தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கிளைமேட் சேஞ்ச் குறித்துக் கருந்தரங்களில் விவாதிக்க முடியால் தோற்றுப்போயுள்ளனர். இதனால் இதனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
இதன் முதல்படியாக உலக வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பிரென்ச் அதிபர் இமானுவெல் மக்ரோன் தெரிவித்தார்.
எதிர்காலம் இல்லை..
படிம எரிபொருள் துறைக்கு ( fossil fuel industry) எதிர்காலம் இல்லை என்பாதல் உலக வங்கி இத்துறைக்கு அளிக்கப்படும் கடன்களை முழுமையாக நிறுத்தியுள்ளது.
இந்தியா
உலக வங்கியின் முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இனி இந்திய வங்கிகள் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ரிலையன்ஸ், கெயில், பார்த் பெர்ரோலியம், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களுக்கு நிதியுதவியோ அல்லது கடனோ செய்யக்கூடாது.


Click it and Unblock the Notifications