டெல்லி: உலக வங்கி நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. மேலும் 2015-16ஆம் ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 6.4 சதவீதமாகவும், 2016-17ஆம் ஆண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
இந்தியாவில் வளர்ச்சிக்கான சாத்தியகூறுகள் அதிகளவில் உள்ளது, மேலும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்களின் மூலம் நாட்டின் வளர்ச்சி கணிப்புகளையும் தாண்டும் அளவிற்கு வளர வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா டெவலப்மெண்ட் அப்டேட்
இந்தியாவில் திறன், கல்வி, உள்நாட்டு சந்தையை ஒருங்கிணைக்கு பணி மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் மிகவும் தீவரமாக நடந்து வருகிறது இதன் மூலம் அடுத்த 3 முதல் 5 வருடத்தில் நாட்டின் வளர்ச்சி மிகவும் சிறப்பாகவும், வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி கொடுக்கும் நிலைக்கு உயரும் என உலக வங்கி, இந்தியா டெவலப்மெண்ட் அப்டேட் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளர்ச்சியை தாக்கும் காரணிகள்
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில், நிதி சந்தையின் பலவீனம், மந்தமான உலக பொருளாதார வளர்ச்சி, அதிகப்படியான எண்ணெய் விலை, உலக அரசியல் பிரச்சனைகள் உள்ளது குறிப்பிடதக்கது.
இந்தியாவில் என்ன பிரச்சனை??
உலகளவில் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய காரணிகளை பார்தோம், அப்ப இந்தியாவுல பிரச்சனையே இல்லையா???. இருக்கு மின் பற்றாக்குறை, குறைந்தபட்ச வருவாய் வசூல் மற்றும் 7வது சம்பள கமிஷன் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தடைகளாகும்.
வரிகள்
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கும் உள்ள முறைமுக மற்றும் வெளிப்புற பிரச்சனைகள். GST வரி அமைப்பதன் மூலம் நாட்டின் போட்டித் தன்மை அதிகரிக்கும், மேலும் வருவாய் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீடு எளிதாக கவர முடியும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications