உலகின் முன்னணி பொருளாதார நாடான சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், சீனாவின் வளர்ச்சி விகிதம் சரிவடையலாம் என உலக வங்கி கணித்துள்ளது.
சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி மந்த நிலை, ஜீரோ கோவிட் பாலிசி, இது 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு சீனாவின் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்தித்துள்ளது.
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான வருடாந்திர வளர்ச்சி குறித்தான கண்ணோட்டம், 5%ல் இருந்து 3.2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலக வங்கி
இதில் சீனாவின் பங்கு முக்கியமானதாகும். இது கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 86% பங்கு வகிக்கிறது. இதற்கிடையில் தான் உலகின் இரண்டாவது பொருளாதார நாடான சீனாவின் ஜிடிபி வளர்ச்சியினை உலக வங்கி குறைத்துள்ளது. இது வெறும் 2.8% மட்டும் இருக்கும் என கணித்துள்ளது.
எவ்வளவு வளர்ச்சி விகிதம்?
அதேசமயம் மற்ற 23 நாடுகளின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5.3% வளர்ச்சியினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2021ல் இருந்து 2.6% வளர்ச்சியினை விட இரட்டிப்பாகும். சீனாவின் மாறுபட்ட பாதையால் 1990க்கு பிறகு முதல் முறையாக ஜிடிபி வளர்ச்சியினை, மற்ற நாடுகளுக்கு பின்னால் பின் தங்கியுள்ளது.
ஏற்றுமதி சரிவு
கொரோனாவிற்கு பிறகு கமாடிட்டி விலைகளும் உயர்ந்துள்ளன. அதேசமயம் நுகர்வும் அதிகரித்துள்ளது. எனினும் சீனாவில் போடப்பட்ட ஜீரோ கோவிட் பாலிசியால் உள்நாட்டு விற்பனையானது சரிவினைக் கண்டுள்ளது. ஏற்றுமதியும் சரிவினைக் கண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சீனா அரசின் எதிர்பார்ப்பு
இதே சீனா அரசு 2021ல் ஜிடிபி வளர்ச்சி விகிதமானது 8.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. 2022ல் 5.5% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது. உலக வங்கி 5% வளர்ச்சி காணலாம் என கணித்திருந்த நிலையில், அதனை தற்போது 2.6% ஆக குறைத்துள்ளது. மேலும் 2023ம் ஆண்டிலும் 4.5% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications