இன்னும் 20 வருடத்தில் இதுவும் நடக்கலாம்..!

ஒவ்வொரு தசாப்தங்களில் (10 வருடங்கள்) உலகம் பல்வேறு விதமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 20 வருடத்திற்கு முன்பு பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதாரச் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தியது என்று நிலைமை வேறு.

இதேபோல் 20 வருடங்களுக்கு ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே நாட்டின் மிகப்பெரிய சக்தியாக விளங்கி வந்தது, ஆனால் இப்போது சேவை மற்றும் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நிறுவனங்களை ஆதிக்கம் செலுத்துகிறது. இப்படி ஒவ்வொரு தசாப்தங்களிலும் பல்வேறு விதமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது இந்த உலகம்.

இந்நிலையில் அடுத்த 20 வருடத்தில் நாம் சந்திக்க உள்ள மிகப்பெரிய மாற்றங்களின் கற்பனை தொகுப்பே இது.

அமெரிக்கா அவுட்.. சீனா இன்..

அமெரிக்கா அவுட்.. சீனா இன்..

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தகர்த்து ஏறியபோகிறது சீனா. இதன் மூலம் வல்லரசு மற்றும் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தைப் பிடிக்கப்போகிறது.

சீனாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இந்தியா இடம்பெறும்.

 

வளர்ச்சியில் நம்பர் ஒன்

வளர்ச்சியில் நம்பர் ஒன்

தற்போது இந்தியாவிற்கு இருக்கும் அதிகப்படியான பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகள் 20 வருடத்திற்குப் பின் ஆப்ரிக்கா இந்த இடத்தைப் பிடிக்கும்.

உலகில் இருக்கும் ஒட்டுமொத்த நிறுவனங்களும் ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்யவும், வர்த்தகச் சந்தையைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும்போது ஐரோப்பாவின் வளர்ச்சி தேக்கமடையும்.

 

தூள்கிளப்பும் பிரிட்டன்

தூள்கிளப்பும் பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இதுநாள் வரையில் தனது வளர்ச்சி மற்றும் ஆதிக்கத்தை இழந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற உள்ளது.

இதன் மூலம் 20 வருடங்களுக்குப் பின் பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடையும்.

 

டெக் நிறுவனங்களின் ஆதிக்கம்..

டெக் நிறுவனங்களின் ஆதிக்கம்..

20 வருடங்களுக்குப் பின் உலகின் 20 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில் 19 நிறுவனங்கள் டெக் நிறுவனங்களாக இருக்கும்.

டிரைவ்லெஸ் கார்

டிரைவ்லெஸ் கார்

தற்போது கார் தயாரிப்பில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்த 20 வருடத்தில் மிகப்பெரிய பிரச்சனையைச் சந்திக்கும், இல்லையெனில் நிறுவனங்கள் மூடப்படும். இதற்கு முக்கியக் காரணம் டிரைவ்லெஸ் கார்ஸ்.

இதுமட்டுமல்லாமல் உலகின் 60 சதவீத கார்கள் கூகிள் நிறுவனத்தின் ஆள்ளில்லா கார்களான waymo ஆகதான் இருக்கும்.

 

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

இப்போதே ஆட்டோமேஷன் தலைதூக்கியுள்ள நிலையில் அடுத்த 20 வருடத்தில் உலகின் அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் பயன்பாடு அதிகரிக்கும்.

இதோடு சொத்து மற்றும் ஊதிய அளவுகளில் அதிகளவிலான வித்தியாசம் தலைதூக்கி வேலையில்லா திண்டாட்டம் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் கணிக்க முடியாத அளவிற்கு உயரும்.

 

ஆல்பபெட்

ஆல்பபெட்

உலகின் மிகப்பெரிய நிறுவனமாகக் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இருக்கும். ஆப்பிள் தற்போது பிளாக்பெரி சந்தித்துள்ள நிலையை அடையலாம்.

கல்வி

கல்வி

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக 40 சதவீத உயர் கல்வி திட்டங்கள் அனைத்தும் கிளவுட் சேவையின் வாயிலாகவே நடத்தப்படும்.

நேரடி கல்லூரி கல்வி முறையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறையும்.

 

அரசியல்

அரசியல்

இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட அனைத்து நாட்டுகளின் ஆட்சிமுறையிலும், கட்சிகளும் மாறுபடும். சில நாடுகளில் புதிய கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் உண்டு.

தமிழ்நாடு

தமிழ்நாடு

அடுத்த 20 வருடத்தில் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்று மக்களாகி நீங்கள் சொல்லுங்க..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+